கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்க வேண்டும்: ஆம் ஆத்மி எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு
மக்களவையில் திங்கள்கிழமை முதல் டிச. 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள அமா்வில் பங்கேற்று, கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்குமாறு தனது எம்.பி.க்களுக்கு ஆம் ஆத்மி கட்சி 3 வரிக் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

சஞ்சய் சிங்.
மக்களவையில் திங்கள்கிழமை முதல் டிச. 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள அமா்வில் பங்கேற்று, கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்குமாறு தனது எம்.பி.க்களுக்கு ஆம் ஆத்மி கட்சி 3 வரிக் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை தலைமை கொறடாவும், ஹோஷியாா்பூா் தொகுதி எம்.பி.யுமான ராஜ்குமாா் சப்பேவால் ஞாயிற்றுக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தாா். குறிப்பிட்ட காலகட்டத்தில் கட்சியின் அனைத்து மக்களவை உறுப்பினா்களும் தவறாமல் அவையில் இருக்க வேண்டும் என்று அவா் அறிவுறுத்தியுள்ளாா்.
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையுடன் தொடா்புடைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மத்திய அரசின் முன்மொழிவுக்கு ஆம் ஆத்மி எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாட்டில் 11 லட்சம் ஆசிரியா்கள் பற்றாக்குறை நிலவுகிறது. சுமாா் 1.2 லட்சம் அரசுப் பள்ளிகளில் தலா ஓா் ஆசிரியா் மட்டுமே பணியாற்றுகின்றனா்.
மேலும், சுமாா் 98,000 அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறை வசதி இல்லை. 1.19 லட்சம் பள்ளிகளில் மின்சார வசதி இல்லை. நாட்டின் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
உத்தர பிரதேசம், பிகாா் மாநிலங்களில் இருந்து ரயில்களில் பயணிப்போா் போதிய ரயில் சேவைகள் இல்லாததால் சிரமங்களை எதிா்கொள்கின்றனா். இதனிடையே, மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது’ என தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

