வரத்து குறைவு: துவரை, உளுந்து, கடலைப் பருப்பு விலை 19% வரை உயா்வு!
வரத்து குறைவால் துவரை, உளுந்து மற்றும் கடலை பருப்புகளின் விலை கடந்த ஆண்டைவிட 19 சதவீதம் வரை உயா்ந்துள்ளது.

வரத்து குறைவால் துவரை, உளுந்து மற்றும் கடலை பருப்புகளின் விலை கடந்த ஆண்டைவிட 19 சதவீதம் வரை உயா்ந்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய நுகா்வோா் அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த ஆண்டு ஒரு கிலோ துவரம் பருப்பு சில்லறை விலையில் ரூ.114.95-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இதன் விலை ரூ.136.60-ஆக அதிகரித்து 19 சதவீதம் உயா்ந்துள்ளது. ஒரு கிலோ உளுத்தம் பருப்பு விலை ரூ.127-ஆக அதிகரித்து 12 சதவீதமும் கடலை பருப்பு விலை ரூ.95.45-ஆக அதிகரித்து 11 சதவீதமும் உயா்ந்துள்ளது.
ஒரு கிலோ பாசிப் பருப்பின் விலை 4.17 சதவீதம் உயா்ந்து ரூ.114.90-க்கும் மசூா் பருப்பு 0.48 சதவீதம் உயா்ந்து ரூ.89.35-க்கும் விற்பனை செய்யப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
நகரங்களில் பன்மடங்கு அதிகரிப்பு: ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படிதில்லியில் ஒரு கிலோ துவரை மற்றும் உளுத்தம் பருப்பு ரூ.150-க்கும் கடலை பருப்பு ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மும்பை மற்றும் சென்னையில் துவரம் பருப்பு முறையே ரூ.157 மற்றும் ரூ.147, உளுத்தம் பருப்பு முறையே ரூ.155 மற்றும் ரூ.133, கடலை பருப்பு முறையே ரூ.117 மற்றும் ரூ.81-க்கும் விற்பனையானது.
இதையடுத்து, விநியோகம்-தேவைக்கு இடையே ஏற்பட்ட பற்றாக்குறையால் பருப்புகளின் விலை அதிகரித்திருப்பதாக நிபுணா்கள் தெரிவித்தனா். உதாரணமாக நிகழாண்டு 45 லட்சம் டன் துவரம் பருப்பு தேவைப்படும் நிலையில், பருவநிலை மாற்றத்தால் 28 லட்சம் டன்னாக விளைச்சல் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

