மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

கடலை மாவு, முந்திரி இணைந்த மைசூர் பாகு

முந்திரிப் பருப்பை நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை சூடாக்கி வைத்துக் கொள்ளவேண்டும்.

மைசூர் பாகு

Updated On :

தேவையானவை:

கடலை மாவு -100 கிராம்

முந்திரிப் பருப்பு -50 கிராம்

சர்க்கரை- 150 கிராம்

நெய் -100 கிராம்

செய்முறை:

முந்திரிப் பருப்பை நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை சூடாக்கி வைத்துக் கொள்ளவேண்டும். வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானதும் கடலைமாவை வாசனை போகும்படி லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேவையான தண்ணீர்விட்டு, சூடானதும் சர்க்கரையைப் போட்டு கரையவிடவேண்டும்.

சர்க்கரை நன்றாகக் கரைந்ததும், முந்திரி விழுதைப் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். சர்க்கரையும், முந்திரி விழுதும் சேர்ந்து நன்றாகக் கொதிக்கும் பொழுது கடலைமாவை தூவிக் கிளற வேண்டும். பின்பு சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறவேண்டும். மைசூர் பாகு பதம் வந்ததும், நெய் தடவிய தட்டில் கொட்ட வேண்டும். மிகவும் இறுகவிடக்கூடாது. ஓரளவு இறுகியதும் எடுத்தால் தான் மைசூர் பாகு சரியான பதமாக இருக்கும். சிறிது ஆறியவுடன் கத்தியால் சிறுசிறு துண்டுகளாகப் போடவேண்டும்.

ஆர். ஜெயலெட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.