பாசிப்பருப்பு நெய் உருண்டை
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
பாசிப்பருப்பு நெய் உருண்டை
தேவையானவை:
பாசிப்பருப்பு -250 கிராம்
சர்க்கரை- 200 கிராம்
நெய் -100 கிராம்
முந்திரிப் பருப்பு -25 கிராம்
ஏலக்காய்ப் பொடி -ஒரு தேக்கரண்டி
தேங்காய்- ஒரு சிறிய மூடி
சுக்குப் பொடி- ஒரு சிட்டிகை
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும். பாசிப்பருப்பை மாவாகப் பொடி செய்து கொள்ள வேண்டும். சர்க்கரையையும் இதுபோல் மாவாகப் பொடி செய்து கொள்ளவேண்டும்.
வாணலியில் சிறிது நெய் விட்டு, அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் முந்திரிப் பருப்பை போட்டு தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும். வாணலியில் சிறிது நெய் விட்டுக் காய்ந்ததும், தேங்காய்த் துருவலைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாவாக்கிய பாசிப்பருப்பையும் சர்க்கரையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி இரண்டையும் மாவுடன் கலந்து சேர்த்துக் கொள்ள வேண்டும். முந்திரிப்பருப்பையும் வறுத்த தேங்காய்த் துருவலையும் ஒன்றாகக் கலந்து, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடாக்க வேண்டும். நெய் காய்ந்தவுடன் ஒவ்வொரு கரண்டியாக மாவில் விட்டு மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கிளறிக்கொண்டு சூட்டோடு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

