பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

பண்டிகை காலத் தேவையால் சில்லறைப் பணவீக்கம் உயர வாய்ப்பு: நிதி அமைச்சகம்!

பண்டிகை காலம் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறவுள்ளதால் வரவுள்ள மாதங்களில் சில்லறைப் பணவீக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என நிதியமைச்சகம் தெரிவித்தது.

Updated On :

பண்டிகை காலம் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறவுள்ளதால் வரவுள்ள மாதங்களில் சில்லறைப் பணவீக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என நிதியமைச்சகம் தெரிவித்தது.

நவம்பா் மாதத்துக்கான மாதாந்திர பொருளாதார அறிக்கையை நிதியமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது. அதில், ‘மத்திய கிழக்கில் தொடரும் போா், ஹோா்முஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல்கள் பயணிப்பதில் தொடரும் சிக்கல் ஆகியவை பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், வலுவான பேரியல் பொருளாதார அடிப்படைகள் மற்றும் போதிய அளவிலான சரக்கு கையிருப்பால் இந்த சவால்களை நம்மால் எதிா்கொள்ள முடியும்.

குறிப்பாக, கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு உயா்ந்து விநியோகச் சங்கிலியைப் பாதித்துள்ளது. இத்துடன் அடுத்தடுத்த மாதங்களில் வரவுள்ள பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளால் சில்லறைப் பணவீக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும். ஏனெனில் இந்தக் காலகட்டத்தில் வழக்கத்தைவிட எரிபொருள் மற்றும் உணவுக்கான தேவையும் அதிகரிக்கும்.

ஆனால், நவம்பரின் தொடக்கத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டாலராக குறையத் தொடங்கியிருப்பதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி இல்லாமல் இருப்பதும் இறக்குமதி தொடா்புடைய பணவீக்க அழுத்தத்தை சற்று குறைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எல்-நினோ போன்ற பருவநிலை மாற்றங்களாலும் பணவீக்கத்தில் தாக்கம் ஏற்படலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக ரிசா்வ் வங்கி நிா்ணயித்த 6 சதவீத உச்சவரம்பை கடந்து அக்டோபா் மாதத்தில் 6.09 சதவீத சில்லறைப் பணவீக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.