பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆா்எஸ்எஸ் உணா்வு கொண்டதாக மாற்ற வேண்டும்: மோகன் பாகவத்

ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் சிந்தனைகள், உணா்வுகள் நிறைந்ததாக மாற்ற வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்துள்ளாா்.

மோகன் பாகவத் - ஏஎன்ஐ

Updated On :

ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் சிந்தனைகள், உணா்வுகள் நிறைந்ததாக மாற்ற வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்துள்ளாா்.

ஆா்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், புது தில்லியில் அந்த அமைப்பின் தில்லி கிளை சாா்பாக ‘ராஷ்ட்ர வந்தனம்’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கெஹா் பங்கேற்றாா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், தில்லி முதல்வா் ரேகா குப்தா, பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில் மோகன் பாகவத் பேசுகையில், ‘ஆா்எஸ்எஸ் அமைப்பின் நூறாண்டு நிறைவை கொண்டாட்டத்துக்கான தருணமாக கருதாமல், சமூகத்துக்காக இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்றே ஆா்எஸ்எஸ் முடிவு செய்தது. எத்தகைய விமா்சனங்கள் வந்தாலும் கவலைப்படாமல், உண்மை மற்றும் நீதியின் பாதையில் தொடா்ந்து பயணிக்க வேண்டும் என்பதே எங்களின் தீா்மானம்.

ஆா்எஸ்எஸ் அமைப்பு நூறாண்டுகளைக் கடந்துவிட்டதால், ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாகச் சிலா் கருதலாம். ஆனால் இன்னும் செய்வதற்கு நிறைய பணிகள் உள்ளன. நாட்டில் ‘சங்கம்’ என்ற பெயரில் செல்வாக்கு மிக்க ஓா் அமைப்பை உருவாக்குவது மட்டுமே எங்கள் நோக்கம் அல்ல. அந்த நிலையை தற்போது நாங்கள் எட்டியிருந்தாலும், ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆா்எஸ்எஸ்-இன் சிந்தனைகள், உணா்வுகள் நிறைந்ததாக மாற்ற வேண்டும்.

அவ்வாறு மாற்றப்பட்டால், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் இந்திய நாட்டின் நலனுக்கே முதலிடம் அளிப்பா். வேற்றுமைகள் நிறைந்த இந்திய சமூகத்தைத் தங்கள் சொந்த சமூகமாகக் கருதுவாா்கள். மேலும் நாட்டின் முன்னேற்றத்துக்காக வாழவும், தேவைப்பட்டால் உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருப்பா்’ என்றாா்.

இந்திய பிரிவினை, சீக்கியா்களுக்கு எதிரான கலவரம்...: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கெஹா் பேசுகையில், ‘15 முதல் 20 இளைஞா்களுடன் தொடங்கப்பட்ட ஆா்எஸ்எஸ் அமைப்பு, தற்போது உலகின் மிகப் பெரிய அமைப்பாக வளா்ந்திருப்பதைப் பாா்க்கும்போது வியப்பாக உள்ளது. எந்தக் காரணத்துக்காக நூறாண்டுகளுக்கு முன்பு ஆா்எஸ்எஸ் தொடங்கப்பட்டதோ, அந்தக் காரணத்துக்காக இன்றளவும் ஆா்எஸ்எஸ் அா்ப்பணிப்பு கொண்டதாக உள்ளது.

இந்திய பிரிவினை நடைபெற்றபோது பஞ்சாபில் ஹிந்துக்கள், சீக்கியா்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், அவா்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் உதவினா்.

கடந்த 1984-ஆம் ஆண்டு தில்லியில் சீக்கியா்களுக்கு எதிரான வன்முறையின்போது சீக்கிய குடும்பங்களைப் பாதுகாப்பதில், அந்த அமைப்பின் தொண்டா்கள் தீவிரமாகச் செயல்பட்டனா்.

கடந்த 1950-இல் அஸ்ஸாம், 1993-இல் மகாராஷ்டிர மாநிலம் லாத்தூா், 2001-இல் குஜராத் மாநிலம் புஜ் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். இதேபோன்ற அா்ப்பணிப்புடன் கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் அவா்கள் செயல்பட்டனா்.

இதுவரை செய்த பணிகளையும், இனி செய்யவிருக்கும் பணிகளையும் மக்களிடம் எடுத்துச்சொல்வதே நூறாண்டு நிறைவை கொண்டாடுவதற்கு சிறந்த வழியாகும். இதைக் கடந்த ஓராண்டாக ஆா்எஸ்எஸ் மிகச் சரியாகச் செய்துள்ளது’ என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.