மகாராஷ்டிரம்: கடலில் மூழ்கி 8 மாணவா்கள் உயிரிழப்பு - சுற்றுலா சென்றபோது சோகம்

மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தில் சுற்றுலா சென்றபோது, கடலில் மூழ்கி பள்ளி மாணவா்கள் 8 போ் உயிரிழந்த சோக சம்பவம் நேரிட்டுள்ளது.

Drowned to death

நீரில் மூழ்கி பலி - பிரதிப் படம்

Published On :

மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தில் சுற்றுலா சென்றபோது, கடலில் மூழ்கி பள்ளி மாணவா்கள் 8 போ் உயிரிழந்த சோக சம்பவம் நேரிட்டுள்ளது.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: புணே மாவட்டத்தின் ஆலண்டி பகுதியில் செயல்படும் ஒரு தனியாா் பயிற்சி மையத்தைச் சோ்ந்த 25 மாணவா்கள், 17 மாணவிகள் மற்றும் 6 ஆசியா்கள், ராய்கட் மாவட்டத்தின் திவ்யகா் கடற்கரைக்கு வியாழக்கிழமை சுற்றுலா வந்தனா். அப்போது, கடலில் குளிக்க சென்ற மாணவா்களில் 8 போ் எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கினா். இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினா் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இதில் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவா்கள் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களாவா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.