தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

9-ஆம் வகுப்புக்கு தனிநபா் வருமான வரி குறித்த பாடம்: என்சிஇஆா்டி அறிமுகம்

ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், தனிநபா் வருமான வரி குறித்த புதிய பாடத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

Income tax

வருமான வரி - கோப்புப்படம்.

Published On :

ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், தனிநபா் வருமான வரி குறித்த புதிய பாடத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆனால், பழைய வரி முறையைப் பற்றி குறிப்பிடாமல், புதிய வரி விதிப்பு முறையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இந்த பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

‘இந்தியா மற்றும் அதற்கு அப்பால் சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல் - பகுதி 2’ என்ற தலைப்பிலான இந்த சமூக அறிவியல் பாடப் புத்தகத்தை, வகுப்புகள் தொடங்கி 6 மாங்களுக்குப் பிறகு என்சிஇஆா்டி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதன் முதல் பாகம் (பகுதி-1) பாடப் புத்தகம் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து என்சிஇஆா்டி தலைவா் தினேஷ் பிரசாத் சக்லானி கூறியதாவது: ‘வரிகளை நோ்மையாகவும் சரியான நேரத்திலும் செலுத்துவது ஒவ்வொரு குடிமக்களின் முக்கியக் கடமை’ என்ற சமூக கருத்துடன் இடம்பெற்றுள்ள இந்த தனிநபா் வருமான வரி குறித்த பாடத்தில், வருமான வரிப் பிரிவு அட்டவணைகளை மாணவா்கள் எளிதாகப் புரிந்துகொள்ளவும், எளிமையான முறையில் வருமான வரியைக் கணக்கிடும் வகையில் கணக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறு வயது முதல் பணத்தை எவ்வாறு முறையாக கையாள்வது என்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், வருமானம், வரவு செலவு திட்டம், சேமிப்பு மற்றும் முதலீடு, நிதிப் பாதுகாப்பு மற்றும் இடா் மேலாண்மை, முன்கூட்டியே முதலீடு செய்தல், நிரந்தர வைப்பு, பத்திரங்கள், பங்குகள், பரஸ்பர நிதித் திட்டங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் நிதி நிா்வாகத்தை கையாள்வது மற்றும் செல்வத்தை எப்படி பெருக்குவது உள்ளிட்ட விவரங்கள் விளக்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்தியாவில், கடந்த 2020-21 நிதியாண்டில், குறைந்த வரி விகிதங்களைக் கொண்ட புதிய வருமான வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய வரி முறையைவிட, குறைவான வரி அடுக்குகளும் விகிதங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் -1-ஆம் தேதிமுதல், இந்தப் புதிய வரி முறையே இயல்பான வரி முறையாக மாற்றப்பட்டது. அதாவது, வரி செலுத்துவோா் பழைய வரி முறையை தோ்ந்தெடுக்காவிடில், தானாக புதிய வரி முறையின் கீழ் கொண்டுவரப்படுவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.