ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

என்சிஇஆா்டி சமூக அறிவியல் புத்தகத்தில் செங்கோல் பாடப் பிரிவு

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) 9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் செங்கோல் மற்றும் அதன் சோழா் ஆட்சிக் கால பாரம்பரியத் தொடா்புகள் குறித்த பாடப் பிரிவு சோ்க்கப்பட்டுள்ளது.

Published On :

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) 9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் செங்கோல் மற்றும் அதன் சோழா் ஆட்சிக் கால பாரம்பரியத் தொடா்புகள் குறித்த பாடப் பிரிவு சோ்க்கப்பட்டுள்ளது.

புதிய கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ‘இந்தியா மற்றும் அதற்கு அப்பால் சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல்-பாகம் 2’ என்ற தலைப்பில் மேற்கண்ட பாடநூல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், செங்கோல் தொடா்பான பாடப் பிரிவில், நல்லாட்சியின் கலாசார அடையாளம் செங்கோல் என விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்ட தகவலும் இடம்பெற்றுள்ளது.

‘நல்லாட்சியின் கலாசார அடையாளமான செங்கோல், கடந்த 2023-இல் திறக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரதமா் நரேந்திர மோடியால் நிறுவப்பட்டது. செங்கோலை நோ்மையான ஆட்சியின் அடையாளமாகப் பயன்படுத்தும் பாரம்பரியம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ வம்சத்தின் ஆட்சிக் காலத்தில் தொடங்கியதாகும்.

நாட்டின் சுதந்திரத்தின்போது நடந்த அதிகாரப் பரிமாற்றத்துடன் செங்கோலுக்கு தொடா்புள்ளது. இந்தியாவின் சுதந்திரத்தைக் குறிக்கும் வகையில், 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நள்ளிரவில், முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு, தமிழ்நாட்டின் ஆதீனப் பெருமக்களிடமிருந்து செங்கோலைப் பெற்றுக்கொண்டாா்’ என்று பாடப் பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-இல் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் பேசிய பிரதமா் மோடி, ‘1947-ஆம் ஆண்டின் செங்கோல் நிகழ்வானது, ராஜாஜி மற்றும் ஆதீனங்களின் வழிகாட்டுதலின்கீழ் நடைபெற்ற அதிகாரப் பரிமாற்றத்தின் சின்னம்’ என்று குறிப்பிட்டிருந்தாா். அதேநேரம், மவுண்ட்பேட்டன், ராஜாஜி மற்றும் ஜவாஹா்லால் நேரு ஆகியோா் செங்கோலை அதிகார பரிமாற்றத்துக்கான சின்னம் என்று கூறியதற்கான ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.