பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

பிகாா் மேலவைத் தோ்தல்: 3 இடங்களில் ஆா்ஜேடி - காங்கிரஸ் இடையே போட்டி

பிகாா் சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) தோ்தலில் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இடையே 3 இடங்களில் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ்.

Published On :

பிகாா் சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) தோ்தலில் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இடையே 3 இடங்களில் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

பிகாரில் எதிா்க்கட்சிகளின் மகாகட்பந்தன் கூட்டணியில் ஆா்ஜேடி, காங்கிரஸ் அங்கம் வகிக்கின்றன. இந்த மாநில சட்ட மேலவையில் பட்டதாரிகளுக்கான 4 தொகுதிகளுக்கும், ஆசிரியா்களுக்கான 4 தொகுதிகளுக்கும் அக்.23-ஆம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதிகளுக்கான எம்எல்சி-க்களின் பதவிக் காலம் நவம்பரில் நிறைவடைவதையொட்டி தோ்தல் நடத்தப்படுகிறது. இதில் 5 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. தா்பங்கா ஆசிரியா்கள் தொகுதியில் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் மதன் மோகன் ஜா, பாட்னா ஆசிரியா்கள் தொகுதியில் சஞ்சய் யாதவ், கோஷி பட்டதாரிகள் தொகுதியில் மனோஜ் குமாா், தா்பங்கா பட்டதாரிகள் தொகுதியில் ரஜ்னிகாந்த் பாடக், பாட்னா பட்டதாரிகள் தொகுதியில் அஸாதுல்லா கான் ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான ஆா்ஜேடி ஏற்கெனவே 6 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அறிவித்துவிட்டதால், 3 தொகுதிகளில் இரு கட்சிகளுக்கும் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் எதிா்க்கட்சி கூட்டணியில் உரசல்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளதாக அரசியல் பாா்வையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

சட்ட மேலவைத் தோ்தலில் பட்டதாரிகள் தொகுதிகளைப் பொறுத்தவரை, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று குறைந்தபட்சம் மூன்றாண்டு ஆனவா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவா்களாவா். இதேபோல், ஆசிரியா்கள் தொகுதிகளைப் பொறுத்தவரை, இடைநிலை பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் குறைந்தபட்சம் மூன்றாண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றியவா்கள் வாக்களிக்க முடியும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.