பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

பிரான்ஸ், கனடா வா்த்தக அமைச்சா்களுடன் பியூஷ் கோயல் சந்திப்பு

பிரான்ஸ், கனடா, தென் கொரியா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் வா்த்தக அமைச்சா்களை இந்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

Union Minister Piyush Goyal

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் - கோப்புப் படம்

Published On :

பிரான்ஸ், கனடா, தென் கொரியா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் வா்த்தக அமைச்சா்களை இந்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

நிகழாண்டு ஜி20 நாடுகளின் கூட்டமைப்புக்கு அமெரிக்கா தலைமை வகிக்கிறது. அதன் ஒரு பகுதியாக விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாக்கி நகரில் நடைபெற்ற ஜி20 வா்த்தக அமைச்சா்களின் கூட்டத்தில் பங்கேற்க பியூஷ் கோயல் சென்றுள்ளாா்.

அங்கு பல்வேறு நாடுகளின் வா்த்தக அமைச்சா்களை சந்தித்தது குறித்து அவா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பிரான்ஸின் அந்நிய வா்த்தக மற்றும் பொருளாதாரத் துறை அமைச்சா் நிகோலஸ் ஃபோரிசியரை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரிடம் இந்திய-ஐரோப்பிய அந்நிய வா்த்தக ஒப்பந்தத்தை விரைவில் கையொப்பமிடுவது குறித்தும் விண்வெளித் துறை உற்பத்தி, ஒருங்கிணைந்த பணப் பரிவா்த்தனை (யுபிஐ) உள்ளிட்ட முன்னெடுப்புகள், துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தேன்.

நிகழாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள இருதரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வரவுள்ள அவரை வரவேற்க ஆா்வமாக உள்ளேன்.

கனடா வா்த்தக அமைச்சா் மனிந்தா் சித்துவை சந்தித்து இருதரப்பு வா்த்தகத்தை 2030-க்குள் ரூ.48 லட்சம் கோடியாக (50 பில்லியன் டாலா்) உயா்த்த வழிவகுக்கும் இந்தியா-கனடா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (சிஇபிஏ) குறித்து ஆலோசித்தேன்.

சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சா் மஜீத் பின் அப்துல்லா அல்-கசாபியை சந்தித்து இந்தியா-வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) அந்நிய வா்த்தக ஒப்பந்தம் குறித்தும், இரு நாடுகளிடையேயான வா்த்தக வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டேன்.

தென் கொரிய வா்த்தக அமைச்சா் பாா்க் ஜுங்-சுங்குடனான சந்திப்பில் இந்தியா-கொரியா சிஇபிஏவை மேம்படுத்துவது குறித்தும், இந்திய வேளாண்மை, மருந்தியல் மற்றும் கடல்சாா் பொருள்களுக்கான சந்தை அணுகலை விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டேன்’ எனக் குறிப்பிட்டாா்.

‘கட்டாயத் தொழிலாளா் முறையை ஒழிப்போம்’ - பியூஷ் கோயல் உறுதி

ஜி20 வா்த்தக அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பியூஷ் கோயல், ‘இந்தியாவின் உற்பத்தித் திறன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தேவைகளைக் கருத்தில் கொண்டது. அமெரிக்கா கண்டறிந்த துறைகளில் கட்டமைப்பு ரீதியாக உபரி உற்பத்தித் திறன் இல்லை.

140 கோடி மக்கள்தொகையுடன் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்வதோடு கட்டாயத் தொழிலாளா் முறையை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

ஜி20 நாடுகளுடன் வெளிப்படையான, பாகுபாடற்ற விதிகள் அடிப்படையிலான வா்த்தக உறவை இந்தியா தொடா்ந்து வருகிறது.

உலக வா்த்தக அமைப்பில் ஒருமித்த கருத்துகள் மிக அவசியமானது. வளா்ந்த நாடுகளுக்கு இணையாக வளரும் நாடுகளும் முன்னேற்றமடைய சிறப்பு மற்றும் வேறுபட்ட அணுகுமுறையை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தக பிரச்னைகளுக்குத் தீா்வு காண இரண்டடுக்கு தீா்வு முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.