
50 கிலோ எலி விஷம்! மும்பையில் 15 ஆயிரம் பேரைக் கொல்ல சதி திட்டம் தீட்டியவரின் பின்னணி?
50 கிலோ எலி விஷம் வாங்கி, மும்பையில் 15 ஆயிரம் பேரைக் கொல்ல சதி திட்டம் தீட்டியவரின் பின்னணி பற்றி..
மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேரைக் கொல்ல சதி
மும்பையில், ஜூன் மாதம் நடந்த முகரம் நிகழ்ச்சியின்போது 15 ஆயிரம் பேரைக் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாகக் கைது செய்யப்பட்ட பையஸ் பிரேம்ஜி (39) மீது சுமார் 700 பக்க குற்றப்பத்திரிகையை மும்பை காவல்துறை தாக்கல் செய்திருக்கிறது.
கைதான பையஸ், சுமார் 50 கிலோ எலி விஷம் எனப்படும் மிகக் கொடிய விஷமான ஸிங்க் போஸ்பைட் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளார். அவரது இருப்பிடத்திலிருந்து சுமார் 15 ஆயிரம் எலி விஷம் நிரப்பப்பட்ட மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஒரு சமுதாய மக்கள் மீதான கோபத்தில் அவர் இந்த சதித் திட்டத்தைத் தீட்டியதாகவும் குறிப்பிடப்பட்டுளள்து.
பையஸ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, சுமார் 30 சாட்சியங்களின் வாக்குமூலம் உள்ளிட்டவையும் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ளது.
தங்கும் விடுதியில் இருந்துகொண்டு சுமார் 30 ஆயிரம் காப்சூல்களை ஆர்டர் செய்திருக்கிறார். இவர் பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலையை புணேவில் நடத்தி வந்துள்ளார்.
முகரம் நிகழ்ச்சியின்போது, வலி நிவாரணி மற்றும் சத்து மாத்திரை என்று கூறி இந்த எலி விஷ மாத்திரைகளை விற்பனை செய்யவும் பையஸ் திட்டமிட்டிருந்தாராம்.
சம்பவத்தின்போது, இந்த மாத்திரையை சாப்பிட்ட ஒருவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் மூலம் பையஸ் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டார். அப்போதுதான் அவர் சுமார் 15 ஆயிரம் பேரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக பல கட்ட விசாரணை நடத்தப்பட்டு பல சாட்சியங்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆரம்ப கால விசாரணையின்போது, பையஸ் சற்று மன நிம்மதியை இழந்திருந்தவர் போல காணப்பட்டதாகவும், ஒரு சமுதாய மக்களால் தனது வாழ்க்கை தடம்புரண்டுவிட்டதாகவும் அவர் கூறியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


