'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி! ஏன்?
'சத்தியாகிரகம்' என்ற பெயரில் புதிய இணையதளத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியுள்ளது பற்றி...
ராகுல் காந்தி தொடங்கியுள்ள புதிய இணையதளம்... - https://rahulgandhi.in/satyagraha
நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களை ஒருங்கிணைக்க 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் வேலைவாய்ப்பின்மை, நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகள், மக்களின் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என பல தரப்பட்ட மக்களையும் சந்தித்து உரையாடி வருகிறார்.
அந்தவகையில் நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களை, மக்களின் பிரச்னைகளை ஒருங்கிணைக்க 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளார். மக்கள் தங்களின் பிரச்னைகளை அல்லது போராட்ட முன்னெடுப்புகளை இந்த இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் அதற்கு தான் ஏதாவது ஒரு வகையில் துணையாக நிற்பேன் எனவும் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"நாடு முழுவதும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். பெரும்பாலும் அவர்கள் தனித்தே போராடுகிறார்கள்.
ஜென்-ஸி தலைமுறையினர், மாணவர்கள், விவசாயிகள், பழங்குடியினர், தலித்துகள், பெண்கள் என ஒவ்வொரு போராட்டத்திற்கும் ஒரு தனிப்பட்ட கதை உண்டு. ஆனால், தனித்து எழும் குரல் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டு விடுகிறது.
இந்த குரல்கள் அனைத்தையும் ஒரு வரைபடத்தில் ஒருங்கிணைக்கும் முயற்சியே 'சத்தியாகிரகம்'.
'உண்மையே மிகச்சிறந்த ஆயுதம்' என்று மகாத்மா காந்தியடிகள் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். ஆனால், உண்மையின் துணையுடன் ஒற்றுமையாக ஒன்றிணைந்து நிற்பது அதை விடவும் வலிமையான ஆயுதமாகும்.
நீங்களும் ஏதேனும் அநீதிக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்தால், உங்கள் பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இதற்கு இரண்டு நிமிடங்களே எடுத்துக்கொள்ளும்.
உங்கள் பிரச்னையும் போராட்டமும் அந்த வரைபடத்தில் இடம்பெறும். சத்தியாகிரகம் இணையதளத்தில் இடம்பெறும். உங்களைப் போலவே வேறு யார் போராடுகிறார்கள் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
எதிர்க்கட்சித் தலைவராக என்னால் என்ன முடியுமோ அதைச் செய்வேன். நாடாளுமன்றத்திலோ, வீதிகளிலோ, கடிதங்கள் மூலமாகவோ அல்லது தேவைப்படும் இடங்களில் உங்களுடன் நேரிலோ என்னால் இயன்ற அனைத்தையும் நான் செய்வேன். இது எனது பொறுப்பு.
உங்கள் சத்தியாகிரகப் போராட்டத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
दà¥à¤¶à¤à¤° मà¥à¤ लà¥à¤ à¤à¤ªà¤¨à¥ हà¤à¤¼ à¤à¥ लिठलड़ रहॠहà¥à¤ - à¤à¤° à¤à¤à¥à¤¸à¤° à¤à¤à¥à¤²à¥ लड़ रहॠहà¥à¤à¥¤
— Rahul Gandhi (@RahulGandhi) October 3, 2026
Gen Z, à¤à¤¾à¤¤à¥à¤°, à¤à¤¿à¤¸à¤¾à¤¨, à¤à¤¦à¤¿à¤µà¤¾à¤¸à¥, दलित, महिलाà¤à¤ - हर सà¤à¤à¤°à¥à¤· à¤à¥ à¤à¤ªà¤¨à¥ à¤à¤¹à¤¾à¤¨à¥ हà¥à¥¤ पर à¤à¥ à¤à¤µà¤¾à¤à¤¼ à¤à¤à¥à¤²à¥ à¤à¤ तॠहà¥, वॠà¤à¤à¥à¤¸à¤° दब à¤à¤¾à¤¤à¥ हà¥à¥¤
'सतà¥à¤¯à¤¾à¤à¥à¤°à¤¹' à¤à¤¨à¥à¤¹à¥à¤ à¤à¤µà¤¾à¤à¤¼à¥à¤ à¤à¥ à¤à¤ नà¤à¥à¤¶à¥ पर साथ लानॠà¤à¥ पहल हà¥à¥¤
बापॠनॠयहॠसिà¤à¤¾à¤¯à¤¾ था⦠pic.twitter.com/X8jUwnyLBO
இணையதளத்தில் இருப்பது என்ன?
அநீதிக்காக நாடு முழுவதும் போராடும் மக்களின் போராட்டம், ஓரு எதிர்க்கட்சித் தலைவராக என்னுடைய போராட்டம் என்றும் இது ஒரு புதிய சத்தியாகிரகத்திற்கான நேரம் என்றும் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.
மேலும் இதில் உங்களுடைய பெயர், மாநிலம், மாவட்டம், தொலைபேசி எண், போராட்டத்தின் காரணம், மக்கள் உங்களுடைய போராட்டம் பற்றி என்ன தெரிந்துகொள்ள வேண்டும்? உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படுகின்றன.
இந்த தகவல் அனைத்தும் பாதுகாப்பானவை, யாரிடமும் பகிரப்படாது என்றும் தகவல் தொடர்புக்காகவே மொபைல் நம்பர் பெறப்படுவதாகவும் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி இந்த பதிவை பதிவிட்டு சுமார் 6 மணி நேரங்களில் நாடு முழுவதிலும் இருந்து இதுவரை 863 பிரச்னைகள் பதிவாகியுள்ளன.
இதில் விவசாயம், கல்வி, சுகாதாரம், மதம், தொழிலாளர் உரிமைகள், நில உரிமைகள், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.
இதில் ஒரு பிரிவின் கீழ் மக்கள் தங்களுடைய பிரச்னையை பதிவு செய்யலாம் என்றும் அவை விரைந்து பரிசீலிக்கப்பட்டு அதுபற்றி எதாவது ஒரு தளத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரால் பேசப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்திற்கு->> https://rahulgandhi.in/satyagraha?lang=en
Summary
Congress leader Rahul Gandhi launched a website named Satyagraha
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





