காலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டம்: மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா கைதா? கடத்தலா?

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தில் நேஹா போரா கைது செய்யப்பட்டது குறித்து...

நேஹா போரா கைது செய்து அழைத்துச்செல்லப்பட்டபோது / போராட்டக்களத்தில்... - எக்ஸ்

Published On :

தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போராவை காவல் துறையினர் கைது செய்து அங்கீகரிக்கப்படாத வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

நேஹா போராவை அழைத்துச் சென்றது காவல் துறையினரின் வாகனமாக இல்லாததால், அவர் கைது செய்யப்பட்டாரா? அல்லது கடத்திச் செல்லப்பட்டாரா? என்று மாணவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், கைது செய்து அழைத்துச் செல்லும்போது ஒரு பெண் காவலர் கூட வாகனத்தில் செல்லவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க முயன்ற காவலர்களில் பலர் தங்கள் பெயரை அடையாளப்படுத்தவில்லை என்றும், இதனால், நேஹாவை கைது செய்து அழைத்துச் சென்றவர்கள் காவலர்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் அகில இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று (அக். 4) மூன்றாவது நாளாகப் போராட்டம் நடைபெற்றது. மாணவர் சங்கத்தின் தலைவர் நேஹா போரா, மாணவர்களை வழிநடத்தி போராட்டத்தை முன்னெடுத்தார்.

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என முழக்கங்களை எழுப்பியவாறு அசோகா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். மேலும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.

அப்போது காவலர்களின் தடுப்புகள் மீது ஏறி போராடிய நேஹா போரா உள்ளிட்ட மாணவர் சங்க நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதில் நேஹா போராவை அழைத்துச் சென்ற வாகனம் காவல் துறையின் வாகனம் அல்ல என்றும், கைது செய்து அழைத்துச் சென்றவர்கள் பெயர்ப் பட்டை இல்லாத சீருடை அணிந்திருந்ததாகவும் அகில இந்திய மாணவர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதுமட்டுமின்றி பெண்ணை கைது செய்து அழைத்துச் செல்லும் வாகனத்தில் ஒரு பெண் காவலர் கூட இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நேஹா போரா கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டாரா? அல்லது கடத்திச்செல்லப்பட்டாரா? எனவும் மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Summary

AISA President Neha Bora Picked Up By Delhi Police In Anti-CEC Protest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER