
நாங்கள் பூச்சிகளோ, நாய்களோ அல்ல; நாட்டின் குடிமக்கள் - நேஹா போரா
நாங்கள் நாய்களோ, பூச்சிகளோ அல்லது தொல்லைதரும் உயிரினங்களோ அல்ல; நாட்டின் குடிமக்கள் என நேஹா போரா தெரிவித்துள்ளது குறித்து...

நேஹா போரா - எக்ஸ்
நாங்கள் நாய்களோ, பூச்சிகளோ அல்லது தொல்லைதரும் உயிரினங்களோ அல்ல; இந்நாட்டின் குடிமக்கள் என இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தெரிவித்துள்ளார்.
வெறுமனே வாகனங்களில் திணித்து ஏற்றிச் செல்லக்கூடிய நபர்கள் அல்ல என்றும், உரிமைகளுக்காக போராடக் கூடியவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் அகில இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று (அக். 4) போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் அச்சங்கத்தின் தலைவர் நேஹா போரா, மாணவர்களை வழிநடத்தி போராட்டத்தை முன்னெடுத்தார்.
ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என முழக்கங்களை எழுப்பியவாறு அசோகா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். மேலும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.
அப்போது காவலர்களின் தடுப்புகள் மீது ஏறி போராடிய நேஹா போரா உள்ளிட்ட மாணவர் சங்க நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதில் நேஹா போராவை அழைத்துச் சென்ற வாகனம் காவல் துறையின் வாகனம் அல்ல என்றும், கைது செய்து அழைத்துச் சென்றவர்கள் பெயர்ப் பலகை இல்லாத சீருடை அணிந்திருந்ததாகவும் அகில இந்திய மாணவர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதுமட்டுமின்றி பெண்ணை கைது செய்து அழைத்துச் செல்லும் வாகனத்தில் ஒரு பெண் காவலர் கூட இல்லை எனவும் சுட்டிக்காட்டியது. இந்திய மாணவர் சங்கம் தரப்பில் இருந்து வழக்குரைஞர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதனிடையே போராட்டக் களத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட நேஹா போராவை காவல் துறையினர் மாலையில் விடுவித்தனர். காவல் துறை கைது செய்து அழைத்துச் சென்ற வாகனத்தில் இருந்தவாறே பேசிய நேஹா போரா,
''நாங்கள் நாய்களோ, பூச்சிகளோ அல்லது தொல்லைதரும் உயிரினங்களோ அல்ல. நாங்கள் இந்நாட்டின் குடிமக்கள்; வாகனங்களில் சாதாரணமாகத் திணித்துக்கொண்டு செல்லப்படக்கூடியவர்கள் அல்ல. உரிமைக்காக போராடுபவர்களை வீழ்த்த முடியாது'' எனக் குறிப்பிட்டார்.
Summary
Neha Bora speaks about today’s protest and her detention after being released
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






