தொழில் நிர்வாகத் துறையில் திறன்மிகு தொழில்நுட்பப் பயன்பாடு அவசியம்: குடியரசு துணைத் தலைவர்!
தொழில் நிர்வாகத் துறையில் திறன்மிகு தொழில்நுட்பப் பயன்பாடு அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
தொழில் நிர்வாகத் துறையில் திறன்மிகு தொழில்நுட்பப் பயன்பாடு அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்திய நிறுவன செயலாளர்கள் (கம்பெனி செக்ரடரீஸ்) அமைப்பின் 58ஆவது நிறுவன தினத்தையொட்டி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வரும் சூழலில், இன்று முக்கியமானதாக இருப்பது வரும் மாதங்கள் அல்லது ஆண்டுகளில் காலாவதியாகிவிடலாம். மாறிவரும் சூழலுக்கேற்ப அனைவரும் தயாராக வேண்டும். செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட தகவல் மேலாண்மை, டிஜிட்டல் கட்டமைப்புகள் ஆகியவை நிறுவனங்கள் செயல்படும் விதத்தை மாற்றி அமைத்துள்ளன. நிறுவனங்களின் நிர்வாகத்தில் விதிமுறைகளை பின்பற்றிச் செயல்படுவதில் கம்பெனி செக்ரடரிகளின் பங்களிப்பு முக்கியமானதாகும். தொழில் நிர்வாகத் துறையில் திறன்மிகு தொழில்நுட்பப் பயன்பாடு அவசியம் .
எனினும், மனித சிந்தனைக்கு மாற்றாக எதுவும் வர முடியாது. இந்திய நிறுவனங்களின் சட்டபூர்வ, உத்திசார்ந்த அடிப்படையைக் காப்பாற்ற கம்பெனி செக்ரடரிகள் பாடுபட வேண்டும். மத்தியிலும் மாநிலங்களிலும் மக்களின் நலன்களைக் காப்பதற்கு நல்லாட்சி அவசியமாகும். தற்சார்பு மிகுந்த, வளர்ந்த தேசமாக முன்னேற இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ள சூழலில் உலகின் தனிப்பெரும் பொருளாதார சக்தியாக நம் நாடு உருவெடுக்கும் என்று நான் நம்புகிறேன்.
மற்றவர்களுக்கு கட்டளையிடுவதற்காக அல்லாமல் நமக்கு யாரும் கட்டளையிடாமல் இருப்பதற்காக இந்த நிலையை நாம் எட்ட வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு வலுவான அமைப்புகளும், சிறந்த ஆட்சிமுறையும் அவசியம்.
தகவல் திரட்டப்படும் முறையை தொழில்நுட்பம் மாற்றி இருக்கலாம். ஆனால் நேர்மை, நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவை கம்பெனி செக்ரடரிகளின் பொறுப்புகளாகும் என்றார் அவர்.
மகாவீரருக்கு புகழாரம்: சமண மதம் தொடர்புடைய மன்னிப்பு கோருதல் விழாவையொட்டி தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் "மகாவீரரின் போதனைகள் நேற்றைக்கும் இன்றைக்குமானவை அல்ல.
அவை பூமி இருக்கும் வரை வருங்காலத்துக்கு வழிகாட்டும் விளக்கைப் போன்றவை. மனித சமூகத்துக்கான அவரது போதனைகள் என்றைக்கும் நிலைத்திருக்கும். பழிவாங்குதலுக்கு பதிலாக சீர்திருத்தத்தையும், வெறுப்புக்கு பதிலாக பேச்சுவார்த்தையையும், விரோதத்துக்கு பதிலாக நல்லிணக்கத்தையும் தேர்வு செய்வதே மன்னிப்பதன் அர்த்தம்' என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி கே.சி.ஜெயினுக்கு "ஜெயின் சமாஜ் ரத்னா' விருதை அவர் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




