படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

கல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!

மேற்கு வங்கத்தில் கல்வி நிறுவனங்கள் மீது வலதுசாரி இயக்கங்கள் தாக்குதல் நடத்தியதற்கு நேஹா போரா கண்டனம்...

 Neha Bora

நேஹா போரா - PTI

Published On :

மேற்கு வங்கத்தில் முதன்மை கல்வி நிறுவனங்கள் மீது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க உள்ளிட்ட வலதுசாரி இயக்கங்கள் தாக்குதல் நடத்தியதற்கு அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறு தொடர்ந்து நடைபெற்றால், அரசுக்கு எதிரான போர் வலுப்பெறும் எனவும் குறிப்பிட்டார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் நேஹா போரா கலந்துகொண்டு உரையாற்றினார்.

மாணவர்கள் முன்பு அவர் பேசியதாவது:

''சத்யஜித்ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் வலதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்களின் தாக்குதல் மீண்டும் மீண்டும் அரங்கேறி வருகிறது. ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கருத்துகள் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றன.

கடந்த ஒரு வாரமாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கூட்டாளியான எஸ்.ஆர்.எஃப்.டி.ஐ. (SRFTI) தொடர்ந்து மாணவர்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஒரு மாதத்திற்கு முன்பு தில்லி ஜேயு பல்கலைக் கழக மாணவர்கள் வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த வெளியாள்களால் சிறைவைக்கப்பட்டு, அவர்கள் மீது கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன. அவர்களால் அதிகாரம் மட்டுமே செய்ய முடியும். இதுபோன்ற தாக்குதல்களால் நம்மை அச்சுறுத்த முடியாது.

வலதுசாரி இயக்கங்கள் ஜனநாயக அமைப்பை மீறிச் செயல்படுகின்றன. மேலும், பேச்சுரிமையை முழுமையாக பறிக்கின்றன. இதனால், அவர்களுக்கு எதிரான நமது போர் மேலும் வலுப்பெறுவது மட்டும் உறுதி'' எனப் பேசினார்.

Summary

RSS BJP attacks on Bengal campuses alleges All India Students Association Neha Bora

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER