டெல்லி கேப்பிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது! ராகுல், பிரியங்கா தொடர்ந்து பேரணி!தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்!

அக். 10 போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது; சிஜேபி கட்சியினருக்கு காவல்துறை நோட்டீஸ்!

ஞானேஷ் குமாரின் ராஜிநாமாவை வலியுறுத்தி வரும் அக். 10 ஆம் தேதி சிஜேபி நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என சிஜேபி கட்சியினருக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்து...

C JP founder Abhijeet Dipke

அபிஜீத் தீப்கே - கோப்புப் படம்

Published On :

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜிநாமாவை வலியுறுத்தி வரும் அக். 10 ஆம் தேதி சிஜேபி நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என சிஜேபி கட்சியினருக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிப்பட்டமுறையில் முடிவெடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

எனவே, ஞானேஷ் குமாரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது அவரே பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளில் மாணவர் அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றன.

இதையடுத்து, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பெரிதும் கவனம் பெற்ற கரப்பான்பூச்சி மக்கள் கட்சி, ஞானேஷ் குமாரின் ராஜிநாமாவை வலியுறுத்தி வரும் அக். 10 ஆம் தேதி தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தவுள்ளது.

இந்த நிலையில், அந்தப் போராட்டத்தில் பங்கேற்கக்கூடாது எனவும் ஜந்தர் மந்தருக்கு செல்வதற்கான பயண செலவுகளுக்கான நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது என்ற விவரங்களை கேட்டும் சிஜேபி கட்சியினருக்கு மகாராஷ்டிரத்தின் சந்திராபூர் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எங்களுடைய அமைதியான போராட்டத்தை சீர்குலைப்பதற்காக ஏற்கெனவே ஏதேனும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதா? நாட்டின் குடிமக்கள் பாதுகாப்பைவிட ஞானேஷ் குமாரின் பாதுகாப்பு முக்கியமா? என்ற கேள்விகளை சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே எழுப்பியுள்ளார்.

Summary

The police have issued a notice to CJP party members, directing them not to participate in the protest organized by the CJP on October 10th, which demands the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER