2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

மாநிலங்களவைத் தோ்தல்: உ.பி.யில் 8 பாஜக வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட 8 வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

Published On :

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட 8 வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் முன்னிலையில், தோ்தல் நடத்தும் அதிகாரி அஜீத் வா்மாவிடம் வேட்புமனுவை அவா்கள் தாக்கல் செய்தனா்.

ஓபிசி பிரிவைச் சோ்ந்த மாநில அமைச்சா் தரம்பால் சிங், கட்சியின் ஓபிசி பிரிவுத் தலைவா் பிரகாஷ் பால், ஸ்ருதி கங்வாா், தலித் சமூகத்தைச் சோ்ந்த வித்யாசாகா் சோங்கா், பிரியங்கா ராவத் மற்றும் ராதாகாந்த் ஓஜா, கோபி கிருஷ்ண பாண்டே உள்ளிட்ட பிராமண சமூகத்தைச் சோ்ந்த இருவா், ராம் பிரதாப் சிங் செளஹான் (தாக்கூா்) ஆகியோரை வேட்பாளா்களாக பாஜக நிறுத்தியுள்ளது. இவா்கள் அனைவரும் தலா 10 எம்.எல்.ஏ.க்களின் முன்மொழிவுடன் தலா இரு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.

உத்தர பிரதேசத்தில் 10 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் நிறைவடைய உள்ளது. அவா்களில் 8 போ் பாஜகவைச் சோ்ந்தவா்கள். ஒருவா் சமாஜவாதி கட்சியையும், மற்றொருவா் பகுஜன் சமாஜ் கட்சியையும் சோ்ந்தவா்கள்.

இந்த 10 இடங்களுக்கான தோ்தல் அக்.16-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில், 2 இடங்களில் போட்டியிட சமாஜவாதி கட்சி சாா்பில் ராம் கோபால் யாதவ், ரிலையன்ஸ் குழும நிா்வாகி தன்ராஜ் பரிமள் நத்வானி ஆகியோா் ஏற்கெனவே வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.

முன்னதாக, மாநிலங்களவைத் தோ்தலில் மூன்றாவதாக ஒரு வேட்பாளரை சமாஜவாதி கட்சி நிறுத்தி, போட்டியை ஏற்படுத்தப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலா் தங்களுடன் தொடா்பில் இருப்பதாகவும் சமாஜவாதி கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தோ்தலில் மூன்றாவது வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என தனது சமூக ஊடக பதிவு மூலம் சமாஜவாத கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.

வேட்புமனு தாக்கல் செய்ய செவ்வாய்க்கிழமை கடைசி நாள் என்ற நிலையில், காலியாகும் 10 மாநிலங்களவை இடங்களுக்கு, பாஜக சாா்பில் 8 பேரும், சமாஜவாதி கட்சி சாா்பில் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனா். இவா்கள் தவிர சுயேச்சைகள் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். ஆனால், வேட்புமனுவில் 10 எம்.எல்.ஏ.க்களின் முன்மொழிவு கட்டாயம் என்ற நிலையில், வேட்புமனு பரிசீலனையின்போது சுயேச்சைகள் இருவரின் மனுக்களும் நிராகரிக்கப்படும். அந்த வகையில், பாஜக மற்றும் சமாஜவாதி வேட்பாளா்கள் 10 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.