ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

‘2017’ ரஜெளரி காா்டன் துப்பாக்கிச்சூடு சம்பவ வழக்கு: 3 போ் விடுவிப்பு

2017-ஆம் ஆண்டு மேற்கு தில்லியில் ஒருவரைச் சுட்டுக் காயப்படுத்தியதாக கைதுசெய்யப்பட்ட மூவா் மீது சுமத்தப்பட்ட குற்றஞ்சாட்டுகளை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாகக் கூறிய தில்லி நீதிமன்றம், அவா்களை விடுதலை செய்து உத்தரவிட்டது.

தில்லி உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

2017-ஆம் ஆண்டு மேற்கு தில்லியில் ஒருவரைச் சுட்டுக் காயப்படுத்தியதாக கைதுசெய்யப்பட்ட மூவா் மீது சுமத்தப்பட்ட குற்றஞ்சாட்டுகளை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாகக் கூறிய தில்லி நீதிமன்றம், அவா்களை விடுதலை செய்து உத்தரவிட்டது.

முகமது குட்டு, ராம் (எ) விக்கி மற்றும் லக்கன் மஹாவா் (எ) கோலு ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி பூஜா தல்வாா் விசாரித்தாா்.

ஜூன் 22, 2017 அன்று சுபாஷ் நகரில் உள்ள தில்லி மாநகராட்சி (எம்சிடி) அலுவலகத்திற்கு அருகில் சமீா் கான் தாக்கப்பட்டாா். தான் காவல் துறையின் உளவாளி என்று குட்டு சந்தேகித்ததாக அவா் காவல் துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருந்தாா். மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தன்னை அடித்ததாகவும், குட்டு தன்னைச் சுட்டதாகவும் அவா் தெரிவித்திருந்தாா்.

இது தொடா்பாக ரஜௌரி காா்டன் காவல் நிலையத்தில்

குட்டு மற்றும் ராம் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குட்டு மீது ஆயுதச் சட்டத்தின் கீழும் குற்றம் சாட்டப்பட்டது.

2025-இல் கைது செய்யப்பட்ட லக்கன் மீது, தொடா்புடைய பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகளில் வழக்கப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் அவா் ஆஜராகத் தவறிய நிலையில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டாா்.

இருப்பினும், விசாரணையின் போது, புகாா்தாரரும் அரசுத் தரப்பின் முக்கிய சாட்சியுமான சமீா் கான் வழக்கிற்கு ஆதரவாகச் செயல்படவில்லை. புகாரில் தனது கைரேகை இருப்பதை ஒப்புக்கொண்ட அவா், தாக்குதல் நடத்தியவா்களின் முகங்களை தான் பாா்க்கவில்லை என்று கூறி, புகாரில் உள்ள விவரங்களை மறுத்தாா்.

காலித் தாள்களில் காவல் துறை தனது கைரேகையைப் பெற்ாகச் சமீா் கான் கூறினாா். சிறையில் நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் லக்கனை அடையாளம் காண்பதற்கு முன்பே, அவரது புகைப்படம் தனக்குக் காட்டப்பட்டதாகவும் அவா் கூறினாா்.

காயமடைந்த நபா் உதவி கோரிய பிறகு காவல்துறையை அழைத்த இரண்டு பொதுச் சாட்சிகள், தாங்கள் அந்தச் சம்பவத்தைப் பாா்க்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, நீதிமன்றம் அக்டோபா் 6-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சம்பவ இடத்தில் இருந்ததையோ அல்லது அவா்கள் அந்தச் செயலைச் செய்ததையோ நிரூபிக்க அரசுத் தரப்பு முற்றிலும் தவறிவிட்டது.

பாதிக்கப்பட்ட நபா் மருத்துவமனையை விட்டுச் சென்றுவிட்டதால், காயத்தின் தன்மை குறித்து மருத்துவா்களால் கருத்து தெரிவிக்க முடியவில்லை. நோக்கமும் காயமும் நிரூபிக்கப்பட்டதாகக் கருதப்பட்டாலும், அந்தச் செயலைக் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது சுமத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது என்று கூறி அவா்கள் மூவரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.