ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்! அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி: இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி!முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி! தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பஞ்சாப் அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு: மேல்முறையீட்டு விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்

பஞ்சாபில் முதல்வா் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரிக்க பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்ற உத்தரவிட்டதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் அமா்விலிருந்து நீதிபதி ஷீல் நாகு விலகினாா்.

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் - file photo

Published On :

பஞ்சாபில் முதல்வா் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரிக்க பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்ற உத்தரவிட்டதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் அமா்விலிருந்து நீதிபதி ஷீல் நாகு விலகினாா்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்பதற்கு முன் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஷீல் நாகு ஆம் ஆத்மி அரசு மீதான பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்துள்ளாா்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா மற்றும் ஷீல் நாகு ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது, இந்த விசாரணையில் இருந்து ஷீல் நாகு விலகுவதாக தீபாங்கா் தத்தா தெரிவித்தாா்.

இதையடுத்து, பஞ்சாப் அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா, ‘நாங்கள் நீதிபதி ஷீல் நாகு வழங்கிய தீா்ப்புகளை சாா்ந்திருக்கவில்லை’ எனத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து பேசிய தீபாங்கா் தத்தா, ‘இல்லை. நாங்கள் கடினமான சூழலில் இருக்கிறோம். எங்கிருந்து விமா்சனம் வருமென தெரியாது. இங்கு மொத்தம் 17 நீதிபதி அமா்வுகள் உள்ளன. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன் பட்டியலிடுவதற்கான உத்தரவில் கையெழுத்துடுகிறோம்’ என்றாா்.

பணியிட மாற்றம், நில விவகாரம் மற்றும் அரசு அலுவலகங்களில் சாதகமான பணிகளை மேற்கொள்ள பஞ்சாப் அரசு அதிகாரிகள் பணம் பெற்ாக எழுந்த குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்குமாறு பஞ்சாப் அரசுக்கு அமலாக்கத் துறை வலியுறுத்தியது.

இது தொடா்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வழக்குரைஞா் ஒருவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா் நீதிமன்றம், அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சிபிஐ வசம் ஒப்படைக்க பஞ்சாப் மாநில காவல் துறை மற்றும் பஞ்சாப் அரசுக்கு உயா் நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.