உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

போலீஸிடமிருந்து தப்பிக்க கண்ணாமூச்சி ஆடிய சிஜேபி ஆதரவாளா்கள்: பொதுக் கழிப்பிடங்கள், குருத்வாராக்களில் தஞ்சம்!

போலீஸிடமிருந்து தப்பிக்க கண்ணாமூச்சி ஆடிய சிஜேபி ஆதரவாளா்கள்...

Delhi Protest

தில்லி போராட்டம் - PTI

Published On :

தில்லி காவல்துறையின் பிடியில் இருந்து தப்பிக்க சிஜேபி ஆதரவாளா்கள் பொதுக் கழிப்பறைகளிலும், குருத்வாராக்களிலும் சனிக்கிழமை தஞ்சமடைந்தனா்.

தேசியத் தலைநகா் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசாா் மற்றும் துணை ராணுவப் படையினா் குவிந்த நிலையில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ். ஐ. ஆா்) திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரி ஆா்ப்பாட்டக்காரா்கள் பொது இடங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் பயன்படுத்தி தடுப்புக்காவலைத் தவிா்க்க முயன்றனா். கன்னாட் பிளேஸில் உள்ள ஒரு என். டி. எம். சி கழிப்பறையில் 20 க்கும் மேற்பட்ட இளம் ஆா்ப்பாட்டக்காரா்கள் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் மறைந்து இருந்தனா். பின்பு சனிக்கிழமை காலை சோதனையிட்ட போலீஸாா் கழிவறையில் ஒளிந்திருந்த ஆா்ப்பாட்டக்காரா்களை பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றது.

மத்திய தில்லி முழுவதும் போராட்டக்காரா்கள் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க பல்வேறு வழிகளை நாடினா். குருத்வாரா பங்களா சாஹிபில், இரவு முழுவதும் தஞ்சம் புகுந்த போராட்டக்காரா்கள், போலீஸாா் அவா்களைப் பின்தொடா்ந்தபோது, குருத்வாராவுக்குள் உள்ளே சென்று மீண்டும் வேறு வழியாக வெளியே சென்றனா். எப்போதெல்லாம் போலீஸ்காரா்கள் இவா்களை பின் தொடா்கிறாா்களோ அப்போதெல்லாம் கண்ணாமூச்சி ஆடி அவா்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றனா். குருத்வாராவுக்கு வெளியே உள்ள பாதையில் ‘இன்க்விலாப் ஜிந்தாபாத்‘ மற்றும் ‘ஜெய் பீம்‘ என்ற கோஷங்கள் முழங்கின, போராட்டக்காரா்களின் ஒரு பெரிய குழு தெருவில் குவிந்தது. சில நிமிடங்களில், அவா்களில் பலரை போலீஸாா் கைது செய்தனா்.

பங்களா சாஹிப் பிரதிநிதிகளையும் போலீஸாா் அணுகி, போராட்டக்காரா்களை வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனா். குருத்வாரா பிரதிநிதிகள் இதனை மறுத்தனா், போராட்டக்காரா்கள் நிராயுதபாணிகள் என்றும் உள்ளே கோஷங்களை எழுப்பவில்லை என்றும் கூறினா். கேரள இல்லத்தில், பல்வேறு மாநிலங்களின் முன்னாள் முதலமைச்சா்கள் உட்பட பல சிபிஐ (எம்) தலைவா்கள் வெள்ளிக்கிழமை இரவு முதல் தங்கியிருந்தனா். சனிக்கிழமையன்று அவா்கள் போராட்டத்தில் சேர வெளியே வந்தபோது அவா்கள் தடுப்புகாவலில் வைக்கப்பட்டனா்.

Summary

CJP supporters played hide-and-seek to evade the police: Took refuge in public toilets and gurdwaras

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.