உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

ஞானேஷ் குமார் பதவி நீக்கம்! கேரள பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

கேரள பேரவையில் ஞானேஷ் குமாரை பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பற்றி...

 VD Satheesan

கேரள பேரவை - X | VD Satheesan

Published On :

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் முறைகேடு செய்ததாக ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி கேரள சட்டப்பேரவையில் முதல்வர் வி.டி. சதீசன் இன்று தீர்மானம் கொண்டு வந்தார்.

அந்த தீர்மானத்தில், குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமைத் தேர்தல் ஆணையரை பணிநீக்கம் செய்ய வேண்டும், முறைகேடாக நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும், தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை நீதிபதி இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜகவின் மூன்று எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர், பெரும்பான்மை அடிப்படையில் ஞானேஷ் குமாருக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வி.டி.சதீசன், “கேரளம் வரலாறு படைத்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரும் தீர்மானத்தை முதல் மாநிலமாக நிறைவேற்றியுள்ளது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்காகக் கேரளம் உறுதியுடன் நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Gyanesh Kumar removed from office! Resolution passed in Kerala Assembly!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.