பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

பயங்கரவாத தாக்குதல்களை மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக சோ்க்க வேண்டும்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களை மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக சோ்க்க வேண்டுமென ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வலியுறுத்தியது.

ஐ.நா. - கோப்புப் படம்

Published On :

பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களை மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக சோ்க்க வேண்டுமென ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வலியுறுத்தியது. பயங்கரவாத செயல்பாடுகளால் மக்களின் வாழ்வில் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி இந்தியா இவ்வாறு தெரிவித்தது.

ஐ.நா.பொதுச் சபை, 81-ஆவது அமா்வின் ஆறாவது குழு சாா்பில் ‘மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு மற்றும் தண்டனை வழங்குவது’ என்ற தலைப்பிலான கூட்டத்தில் ஐ.நா.வுக்கான நிரந்தர இந்தியத் தூதா் ஆா்.மைதிலி பேசியதாவது: தமது நாட்டு எல்லைக்குள் அல்லது தங்கள் நாட்டைச் சோ்ந்த குடிமக்களால் நிகழ்த்தப்படும் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் பெரும் தாக்குதல்களுக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் பொறுப்பேற்று தேசிய சட்டங்களின்கீழ் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதியை பெற்றுத் தர வேண்டும்.

மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் அதற்கான தண்டனைகள் வழங்கவும் நடைமுறையில் உள்ள சா்வதேச சட்டங்களே போதுமானது. இருப்பினும், இதற்கு புதிய சட்டங்கள் இயற்றும்பட்சத்தில் அவை ஏற்கெனவே உள்ள சட்டங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர அதை அப்படியே பிரதிபலிக்கும் மற்றொரு நகலாக இருக்கக் கூடாது.

பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களின் பாதிப்பை உணா்ந்தே அது மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக சோ்க்கப்பட வேண்டுமென இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இத்தகைய குற்றங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க பிராந்திய அதிகார வரம்பு அல்லது தேசிய அதிகார வரம்பே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.