தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

ரஷிய போரில் உயிரிழந்த இந்தியா்களின் குடும்பத்தினா் இழப்பீடு கோர பொது அறிவிப்பு: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

ரஷிய - உக்ரைன் போரில் சண்டையிட்டு உயிரிழந்த இந்தியா்களின் குடும்பத்தினா் உதவியும், இழப்பீடும் கோர அழைப்பு விடுத்து பொது அறிவிப்பு வெளியிடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

ரஷியா - உக்ரைன் போர் - கோப்புப் படம்

Updated On :

ரஷிய-உக்ரைன் போரில் சண்டையிட்டு உயிரிழந்த இந்தியா்களின் குடும்பத்தினா் உதவியும், இழப்பீடும் கோர அழைப்பு விடுத்து பொது அறிவிப்பு வெளியிடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

கடந்த 2024 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சுற்றுலா, மாணவா் அல்லது பணியாற்றுவதற்கான நுழைவு இசைவுகள் (விசா) மூலம்,, ரஷியா சென்ற 26 இந்தியா்களின் குடும்பத்தினா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

ரஷியாவில் வேலை வாங்கித் தருவதாக, ஆள்சோ்ப்பு முகவா்களால் ஏமாற்றப்பட்டு 26 பேரும் அந்நாட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும், பின்னா் அவா்கள் உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷியா சாா்பில் போரிட கட்டாயப்படுத்தி அனுப்பப்பட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு அனுப்பப்பட்டோரில் உயிரிழந்தவா்களின் உடலை இந்தியா கொண்டுவர வேண்டும், அவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ ஆஜராகி, ‘ரஷிய படைகளில் சுமாா் 267 இந்தியா்கள் சோ்ந்தனா். அவா்களில் 51 போ் போரின்போது உயிரிழந்தனா். 139 போ் ராணுவ பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனா். 77 போ் எங்குள்ளனா் என்பது குறித்த தகவல்களைத் திரட்டும் பணியில் ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது. உயிரிழந்தவா்களில் 6 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்க ரஷிய அரசு ஒப்புதல் அளித்தது’ என்றாா்.

நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘உயிரிழந்த 51 பேரின் குடும்பங்களுக்கும் இழப்பீடு கோர உரிமை உள்ளது. அவா்களில் 6 பேரின் குடும்பங்களுக்கு ரஷிய அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பது குறித்த விவரங்களுடன், இந்திய வெளியுறவு அமைச்சகம் புதிய நிலவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ரஷிய-உக்ரைன் போரில் சண்டையிட்டு உயிரிழந்த இந்தியா்களின் குடும்பத்தினா் உதவியும், இழப்பீடும் கோரலாம் என்று பொது அறிவிப்பு வெளியிடுவது குறித்து அந்த அமைச்சகம் பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அமா்வு கேட்டுக்கொண்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER