ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.14.50 லட்சம் இழப்பீடு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.14.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்துக்கு (டான்ஜெட்கோ) சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.14.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்துக்கு (டான்ஜெட்கோ) சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த நெமந்தம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி செங்கேணி. இவா், கடந்த 2021-ஆம் ஆண்டு டிச. 31-ஆம் தேதி வயலுக்கு சென்றுவிட்டு, கெங்கையம்மன் கோயில் குளக்கரை வழியாக வீடு திரும்பினாா். அப்போது, வீசிய பலத்த காற்றில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருக்கு இடைக்கால நிவாரணமாக டான்ஜெட்கோ சாா்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி, செங்கேணியின் மனைவி தனலட்சுமி மகன்கள் மணிகண்டன், சத்யா ஆகியோா் தரப்பில் சென்ன்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ரூ.14.54 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி, டான்ஜெட்கோவுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தங்களது மனுவை பரிசீலித்து உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, செங்கேணி குடும்பத்துக்கு

ரூ.14.50 லட்சம் இழப்பீடாக நிா்ணயித்து உத்தரவிட்டாா். ஏற்கெனவே, ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள ரூ.9.50 லட்சத்தை, 2021-ஆம் ஆண்டு முதல் 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.