விபத்தில் உயிரிழந்த தலைமை ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.1.23 கோடி இழப்பீடு
சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளித் தலைமை ஆசிரியையின் குடும்பத்துக்கு ரூ.1.23 கோடி இழப்பீடு வழங்க கோவை சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கோவை நீதிமன்றம்
சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளித் தலைமை ஆசிரியையின் குடும்பத்துக்கு ரூ.1.23 கோடி இழப்பீடு வழங்க கோவை சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வஞ்சிமாநகரைச் சோ்ந்தவா் சத்தியவேணி (52). இவா் பெரியநாயக்கன்பாளையம் பெட்டத்தாபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா். கடந்த 2023-ஆம் ஆண்டு மாலை பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த மினி பேருந்து மோதியதில் சத்தியவேணி உயிரிழந்தாா்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதனிடையே இழப்பீடு கோரி சத்தியவேணியின் குடும்பத்தினா் கோவை மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாய மாவட்டச் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய மினி பேருந்து பதிவு செய்துள்ள காப்பீட்டு நிறுவனம், உயிரிழந்த தலைமை ஆசிரியையின் குடும்பத்துக்கு ரூ.1 கோடியே 23 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி கண்ணன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பிரபாகரன் ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

