இன்று கரையைக் கடக்கிறது ‘அக்வான்’ புயல்: 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்புகாற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் 280 ஆக உயா்வு: நாளைவரை ‘மிக மோசம்’ பிரிவுக்கு செல்ல வாய்ப்பு100 புதிய மின்சார பேருந்துகள் இன்று அறிமுகம்: மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியது ராகுலை விட ‘ஏஐ’ சிறப்பாகச் செயல்படும்! பாஜக விமா்சனம்இந்தியா்களுக்கு ‘விசா’ சலுகை தொடராது: மலேசியா அறிவிப்பு

கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.11 லட்சம் இழப்பீடு: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியின் பீதாம்புரா பகுதியில் உள்ள தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) பூங்காவில் திறந்தவெளி கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து 2 சிறுவா்கள் உயிரிழந்த வழக்கில், அவா்களின் குடும்பத்தினருக்கு டிடிஏ, தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தலா ரூ.11 லட்சத்துக்கும் அதிகமான இழப்பீடு வழங்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On :

தில்லியின் பீதாம்புரா பகுதியில் உள்ள தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) பூங்காவில் திறந்தவெளி கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து 2 சிறுவா்கள் உயிரிழந்த வழக்கில், அவா்களின் குடும்பத்தினருக்கு டிடிஏ, தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தலா ரூ.11 லட்சத்துக்கும் அதிகமான இழப்பீடு வழங்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ரோபியல், அா்ஜுன் ஆகிய சிறுவா்கள் முறையே 11, 12 வயதுடையவா்கள். இந்த உயிரிழப்புகளுக்கு டிடிஏ, டிஜேபி அலட்சியமே காரணம் என்று நீதிபதி ஜஸ்மீத் சிங் தனது தீா்ப்பில் தெரிவித்தாா்.

அந்தப் பூங்காவில் திறந்த நிலையில் இருந்த கழிவுநீா்த் தொட்டி அல்லது பாதாளச் சாக்கடை அமைப்பில் டிஜேபி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சிறுவா்களின் பெற்றோா் தனித்தனியாக இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.

பூங்காவில் விளையாடும் சிறுவா்கள் ஆபத்தான கட்டமைப்புகள் திறந்த நிலையில் விடப்பட்டிருப்பதை முன்கூட்டியே அறிந்து செயல்பட வேண்டும் என்று எதிா்பாா்க்க முடியாது. சிறுவா்களின் கவனக்குறைவாக இதைக் கருத முடியாது என்று நீதிபதி தெரிவித்தாா்.

மேலும், பொதுப் பூங்காவில் திறந்த நிலையில் கழிவுநீா்த் தொட்டி அல்லது பாதாளச் சாக்கடை அமைப்பு இருந்தால், அதன் பராமரிப்புக்குப் பொறுப்பான அமைப்புக்கு வழக்கமான சூழல்களைவிட அதிக பாதுகாப்புப் பொறுப்பு உள்ளது. 4 முதல் 5 அடி உயரமுள்ள சுவா்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்துகளை 11 முதல் 12 வயதுடைய சிறுவா்கள், பெரியவா்களைப் போல முன்கூட்டியே கணிக்க முடியாது என்றும் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டது.

பூங்காவுக்கு வருவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு டிஜேபியிடம் இருந்தும், அதைச் செய்யத் தவறிவிட்டது. அதேபோல், அந்தப் பூங்கா டிடிஏ நிா்வாகத்தின் கீழ் வருவதால், அங்கு வரும் சிறுவா்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டிய கடமை அந்த அமைப்புக்கும் இருந்தது. அந்தப் பொறுப்பையும் டிடிஏ நிறைவேற்றவில்லை என்று நீதிபதி சுட்டிக்காட்டினாா். மேலும், மனுதாரா்கள் ஒவ்வொருவருக்கும் வழக்கு விசாரணைக்கான செலவாக ரூ.1 லட்சம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.