தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

உத்தரகண்டை உலுக்கிய பெண் கொலையில் தொடர்பு! சிக்கிம் புதிய ஆளுநருக்கு எதிராகப் போராடிய பெற்றோர் கைது!

உத்தரகண்டைச் சேர்ந்த இளம்பெண் அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் நீதி கேட்டு தில்லி இந்தியா கேட் அருகே போராடிய அவரது பெற்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பற்றி...

கைது செய்யப்பட்ட அங்கிதாவின் பெற்றோர்.

Published On :

அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் நீதி கேட்டு தில்லி கேட் அருகே போராடிய அவரது பெற்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்டின் பௌரி மாவட்டத்தில் வனாந்தரா விடுதியில் வரவேற்பாளராகப் பணியாற்றி வந்த அங்கிதா கடந்த 2022 ஆம் ஆண்டு செப். 18 ஆம் தேதி காணாமல் போன நிலையில், அவரது உடல் சிலா கால்வாயிலிருந்து மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இதன் பின்னால் இருந்த குற்றவாளிகளுக்கு அரசியல் பின்புலம் காரணமாக வழக்கு விசாரணையிலும் முரண்பாடு இருந்தது.

இந்த வழக்கில், பாஜக தலைவராக இருந்த வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா உள்ளிட்ட மூவர் மீது குற்றம்சாட்டப்பட்டு, கொலை செய்தல், தடயங்களை மறைத்தல், துன்புறுத்தல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பிறகு மூவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.

முதல்கட்ட தகவலின் அடிப்படையில் பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த அங்கிதாவை, விடுதி உரிமையாளர் புல்கித் ஆர்யா கொலை செய்து கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்த பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தக் கொலைக்கும் தற்போது சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் துஷ்யந்த் கௌதமுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அங்கிதா பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆளுநருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய முடியாது என்பதால், அவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

68 வயதான துஷ்யந்த் கௌதம் பாஜக-வின் தேசிய பொதுச் செயலராகப் பணியாற்றிய நிலையில், கொலை வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் சிபிஐ வழக்கு முடியும் வரை துஷ்யந்த் கௌதமின் ஆளுநர் நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அங்கிதா பண்டாரியின் பெற்றோரை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, எம்.பி பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் புதன்கிழமை சந்தித்து, அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் அங்கிதா பண்டாரியின் பெற்றோரை தில்லி போலீசார் கைது செய்தனர். காங்கிரஸின் சுப்ரியா ஸ்ரீநாத், உதய் பானு சிப், வினோத் ஜாக்கர் மற்றும் வருண் சௌத்ரி ஆகியோரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

அதன்பின்னர் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இருவரையும் காவல் துறையினர் விடுவித்து உள்ளனர். அங்கிதாவின் பெற்றோர் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

Summary

Delhi Police briefly detained Ankita Bhandari's parents and several Congress leaders during an overnight sit-in at India Gate, prompting the party to accuse authorities of targeting those demanding justice in the 2022 murder case and opposing Dushyant Gautam's proposed appointment as Sikkim Governor.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.