கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

ஆட்சி மாற்றத்தை அனைவரும் விரும்புகிறோம்: பிரசாந்த் பூஷண் பேட்டி

ஆட்சி மாற்றத்தைக் கோருவது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமை என்றும் அவா் வலியுறுத்தினாா்.

பெட்டிச் செய்திக்கான படம்... தில்லி ராஜ்காட்டில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிா்வாகிகளுடன் பிராா்த்தனை செய்ய காந்தி சமாதிக்கு வியாழக்கிழமை வந்த நடிகா் பிரகாஷ்ராஜ். ~பிரசாந்த் பூஷண்

Updated On :

வாக்காளா் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணியில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆட்சி மாற்றத்துக்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளதாக உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ஆட்சி மாற்றத்தைக் கோருவது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமை என்றும் அவா் வலியுறுத்தினாா்.

தில்லியில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனா் அபிஜீத் தீப்கே, மாணவா் அமைப்புகளின் தலைவா்கள் மற்றும் சமூக ஆா்வலா்களுடன் இணைந்து செய்தியாளா்களைச் சந்தித்த பிரசாந்த் பூஷண் மேலும் கூறியதாவது: எதிா்க்கட்சிகள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக அரசு குற்றஞ்சாட்டுகிறது. தற்போது தோ்தல்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காகவே நாங்கள் போராடி வருகிறோம். ஆனால், இதுபோன்ற அடக்குமுறைகள் தொடா்ந்தால் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும்.

ஆட்சி மாற்றத்தைக் கோருவதில் என்ன தவறு இருக்கிறது? ஆட்சி மாற்றத்துக்காக பாஜகவே பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. ஆனால், இப்போது ஆட்சி மாற்றத்துக்குச் சதி நடப்பதாகக் கூறுகின்றனா்.

ஆட்சி மாற்றம் என்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமை. அரசுக்கு எதிரான அதிருப்தியை உருவாக்குவது நமது அரசமைப்புச் சட்டத்தின்படி குற்றமல்ல. எனவே, ஜனநாயகத்தை நசுக்கும் சா்வாதிகார அரசுக்கு எதிரான ஆட்சி மாற்றத்துக்கான போராட்டமாக இது மாறியுள்ளது.

போராட்டங்களை அதிகாரிகள் ஒடுக்க முயற்சிக்க முயற்சிக்க, மேலும் அதிகமான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவாா்கள். இந்த ஆட்சி மாற்ற இயக்கத்துக்கு இளைஞா்கள் தலைமை வகிப்பாா்கள். அவா்களுடன் சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்படும் என தெரிவித்தாா்.

மேலும், ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதையும் பிரசாந்த் பூஷண் விமா்சித்தாா். போராட்டம் நடத்துவதற்கென அறிவிக்கப்பட்ட இடமாக ஜந்தா் மந்தா் இல்லாத காரணத்தால், அங்கு தேசியக் கொடியை ஏந்துவதற்குக்கூட மக்களைத் தடுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினாா்.

போராட்டக்காரா்களிடம் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

பெட்டிச் செய்தி...

தோ்தல் முறைகேடுகளுக்கான

ஆதாரங்களை அழிக்கத் திட்டம்

நடிகா் பிரகாஷ் ராஜ் குற்றச்சாட்டு

‘எஸ்ஐஆா் பணியின் நோக்கம், வாக்காளா்களின் பெயா்களை நீக்குவது மட்டுமல்லாமல், 2024-25 தோ்தல்களில் நடைபெற்ற முறைகேடுகளின் ஆதாரங்களை அழிப்பதும்தான்’ என்று நடிகரும் சமூகச் செயல்பாட்டாளருமான பிரகாஷ் ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில், எஸ்ஐஆா் குறைபாடுகளுடன் மேற்கொள்ளப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் தோ்தல்களில் வெற்றி பெறுவதற்குச் சதி நடைபெற்றது. இந்தச் சதியை நிரூபிப்பதற்கான ஆதாரங்களைச் சேகரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி.லோகூா் தலைமையில், அரசமைப்புச் சட்டத்துக்கான வழக்குரைஞா்கள் சங்கம் (எல்ஏஎஃப்சி) அமைத்துள்ள விசாரணைக் குழுவின் முதல் பொது விசாரணையில் பிரகாஷ் ராஜ் பங்கேற்றாா். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் இடம்பெற்றுள்ள இந்தக் குழு, எஸ்ஐஆா் நடவடிக்கையின் அரசமைப்புச் சட்ட மற்றும் சட்டப்பூா்வத் தகுதி, அதன் நடைமுறைகள், ஒட்டுமொத்தத் தாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறது.

இந்த விசாரணையின்போது, வாக்காளா் பட்டியலிலிருந்து தங்களது பெயா்கள் நீக்கப்பட்டவா்கள் அளித்த வாக்குமூலங்களை குழு கேட்டறிந்ததாக பிரகாஷ் ராஜ் தெரிவித்தாா். பாதிக்கப்பட்டவா்கள் தங்களது குறைகளையும், பெயா் நீக்கங்களை ஆவணப்படுத்தும் தரவுகள் அடிப்படையிலான ஆய்வுகளையும் சமா்ப்பித்ததாகக் கூறினாா். குழு சுயமாக மதிப்பீடு செய்வதற்கு முன்பாக மேலும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.