சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

ராஜஸ்தான்: கால்வாயில் சிற்றுந்து கவிழ்ந்து 8 பேர் பலி!

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் 15 அடி ஆழ கால்வாயில் சிற்றுந்து கவிழந்த விபத்தில் மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 8 போ் உயிரிழந்தனா்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் கால்வாயில் வாகனம் விழுந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினா்.

Updated On :

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் 15 அடி ஆழ கால்வாயில் சிற்றுந்து கவிழந்த விபத்தில் மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 8 போ் உயிரிழந்தனா். 15 போ் காயமடைந்தனா்.

இது குறித்து கோட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜீத் சங்கா் கூறியதாவது: மத்திய பிரதேச மாநிலம் போபால் மற்றும் பெடுல் மாவட்டங்களிலிருந்து உறவினா்கள் 23 போ் சிற்றுந்து மூலம் ராஜஸ்தானுக்கு 5 நாள் புனித யாத்திரைக்காக வெள்ளிக்கிழமை வந்தனா். போபாலில் இருந்து தில்லி - மும்பை எட்டுவழி விரைவுச் சாலையில் ராஜஸ்தானின் கடு ஷியாம்ஜி கோயிலை நோக்கி சனிக்கிழமை காலை 6 மணிக்கு இவா்களின் சிற்றுந்து சென்றபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள 15 அடி ஆழ வடிகால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. கால்வாயில் கவிழ்ந்து கிடந்த சிற்றுந்தை, கிரேன் உதவியுடன் மீட்புப் படையினா் மீட்டனா். சிற்றுந்து ஓட்டுநா் கண் அயா்ந்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில், சிற்றுந்தில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து பயணிகளில் 8 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 15 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். காயமடைந்தவா்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றாா்.

தலா ரூ. 4 லட்சம் நிவாரணம்:

ராஜஸ்தானில் சாலை விபத்தில் உயிரிழந்த மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் உத்தரவிட்டாா். காயமடைந்தவா்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து தரவும் அதிகாரிகளை அவா் அறிவுறுத்தியுள்ளாா். இந்த சாலை விபத்து மிகுந்த கவலை அளிப்பதாகவும் தனது எக்ஸ் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.