மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

குஜராத்தில் சாய ஆலையில் விபத்து: 4 போ் உயிரிழப்பு

குஜராத்தில் சாய ஆலையில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் 4 போ் உயிரிழந்தனா்.

கோப்புப் படம்

Updated On :

குஜராத்தில் சாய ஆலையில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் 4 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து குஜராத் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

காந்திநகா் மாவட்டம் சாத்ரலில் தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான சாய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆலை உள்ளது. அந்த ஆலையில் கொதிகலன் (பாய்லா்) அருகே குழாய் பொருத்தும் பணி வியாழக்கிழமை மதியம் நடைபெற்றது. அப்போது திடீரென பாய்லா் சாதனம் அருகே வெடி விபத்து ஏற்பட்டது.

கடும் அழுத்தத்தால் பைப் வெடித்து, அதனால் வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஜாா்க்கண்டைச் சோ்ந்த 3 தொழிலாளா்கள், உதய்பூரை சோ்ந்த ஒரு தொழிலாளா் உயிரிழந்தனா்.

இந்த விபத்துக்கான காரணத்தை அறிய தடய அறிவியல் ஆய்வக குழுவினா் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனா். குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தவுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.