முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மேயர் பிரியா ஆய்வு!எஸ்பிஐ வங்கியின் 3.75 லட்சம் தரவுகள் திருட்டு! ‘டார்க் வெப்’பில் வெளியீடு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை!சென்னையில் விடியவிடிய மழை! மீனம்பாக்கத்தில் 129 மி.மீ. பதிவு! தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(அக்.21) விடுமுறை

ராஜஸ்தானில் துர்க்கை சிலைக் கரைப்பின்போது படகு கவிழ்ந்தது: இருவர் சடலமாக மீட்பு! 2 பேர் மாயம்!

துர்க்கை சிலை கரைப்பு நிகழ்வின்போது நிகழ்ந்த படகு கவிழ்ந்தது பற்றி..

Boat capsizes

துர்க்கை சிலை கரைப்பின்போது படகு கவிழ்ந்தது - PTI

Updated On :

ராஜஸ்தானின் கோட்டாவில், துர்க்கை சிலைக் கரைப்பு நிகழ்வின்போது படகு கால்வாயில் கவிழ்ந்ததில் இருவர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நவராத்திரி விழா நிறைவடைந்த நிலையில் துர்க்கை சிலைக் கரைப்பு நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், ஸ்டீல் பிரிட்ஜ் அருகே செவ்வாய்க்கிழமை இரவு துர்க்கை சிலைக் கரைப்பின்போது ஏழு பேருடன் சென்ற படகு கால்வாயில் கவிழ்ந்ததில், இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காணாமல் போன மற்ற இருவரைத் தேடும் பணியை மீட்புக் குழுவினர் புதன்கிழமை காலை மீண்டும் தொடங்கினர்.

இதுதொடர்பாக கோட்டா நகரக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திர மிஸ்ரா கூறுகையில்,

கோட்டாவைச் சேர்ந்த சூரஜ் சிங் (22), விகாஸ் வர்மா (22) ஆகிய இருவரின் சடலங்கள் இன்று காலை 5.30 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட்ட தேடுதல் பணியின் போது கண்டெடுக்கப்பட்டன.

காணாமல் போன மற்ற இரு இளைஞர்களான ராகுல் ஜோஷி (18) மற்றும் அசு ஜோஷி (19) ஆகியோரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவர்கள் இருவரும் உறவினர்கள் மற்றும் கோட்டா நகரிலுள்ள சஞ்சய் நகரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில், போரேகேடா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஸ்டீல் பிரிட்ஜ் அருகே துர்கை சிலை கரைப்பு நிகழ்வின்போது இந்த படகு கவிழ்ந்தது.

படகு கவிழ்ந்தபோது அதிலிருந்த ஏழு பேரில், தீபக், மான்கன்வர் என்ற பெண் மற்றும் சுரேஷ் (படகோட்டி) ஆகிய மூவர் நீந்தி கரைக்கு வந்து, அங்கிருந்தவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணிக்கு நிறுத்தப்பட்ட தேடுதல் பணி, புதன்கிழமை காலை 5.30 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட்டதாக மிஸ்ரா தெரிவித்தார். மீட்கப்பட்ட இருவரின் சடலங்களும் விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 200 முதல் 300 மீட்டர் தொலைவில் அருகருகே கண்டெடுக்கப்பட்டன. அவை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, தேடுதல் பணிகளை மேற்பார்வையிட்டனர்.

சம்பல் நதிக்கரை மற்றும் கால்வாய்களில் சிலைகள் கரைப்பதற்காக 10 முதல் 12 இடங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன, அங்கு மீட்புக் குழுவினர் நிறுத்தப்பட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், செவ்வாய்க்கிழமை நடந்த இந்தச் சம்பவம், சிலைகளைக் கரைக்க அனுமதி இல்லாத பகுதியில் நிகழ்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.