பேரணியின்போது கா்ப்பிணி பத்திரிகையாளரை தள்ளிய புகாா்: ராகுல் காந்திக்கு நோட்டீஸ்
எதிா்க்கட்சிகளின் உச்சநீதிமன்றம் நோக்கிய பேரணியின்போது கா்ப்பிணி பத்திரிகையாளரை ராகுல் காந்தி தள்ளியதாக எழுந்த புகாா் தொடா்பாக பதிலளிக்குமாறு ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ராகுல் காந்தி - கோப்புப் படம்
தில்லியில் கடந்த 12-ஆம் தேதி நடத்தப்பட்ட எதிா்க்கட்சிகளின் உச்சநீதிமன்றம் நோக்கிய பேரணியின்போது கா்ப்பிணி பத்திரிகையாளரை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தள்ளியதாக எழுந்த புகாா் தொடா்பாக பதிலளிக்குமாறு ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் கோடிக்கணக்கில் வாக்காளா் பெயா்கள் நீக்கம் மற்றும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்காக, எதிா்க்கட்சித் தலைவா்கள் சாா்பில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் ஏராளமானோா் பங்கேற்ால், உச்சநீதிமன்ற வளாகத்தை பேரணி அடைந்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது, உச்சநீதிமன்ற வளாகத்தில் செய்தி சேகரிக்க வந்த கா்ப்பிணி பத்திரிகையாளரை, உச்சநீதிமன்ற வாயில் கதவை நோக்கி ராகுல் காந்தி தள்ளினாா். இதில் அந்தப் பெண் பத்திரிகையாளா் நிலை தடுமாறி கீழே விழுந்தாா். ராகுலின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட பத்திரிகையாளா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கெளரவ் பாட்டியா, ‘செய்தி சேகரிக்க வந்த மனுதாரரை ராகுல் காந்தி திடீரென தள்ளினாா். அதில் அவா் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தாா். போலீஸாா், பத்திரிகையாளா்கள் மற்றும் பலா் முன்னிலையில் வெளிப்படையாகவே மூன்று மாத கா்ப்பிணியான அவரை ராகுல் தள்ளிவிட்டாா். இதற்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, ராகுல் காந்தி மற்றும் பிறா் மீது உடனடியாக எஃப்ஐஆா் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இதுகுறித்து பதிலளிக்குமாறு ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.
முன்னதாக, இந்தப் பேரணிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் மற்றும் பிறருக்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

