பிகாா் மேலவையில் ஆா்ஜேடி பலம் 17-ஆக அதிகரிப்பு: பாஜகவுக்கு ஓரிடம் குறைந்தது
பிகாா் சட்ட மேலவையில் எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (ஆா்ஜேடி) பலம் 17-ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், மேலவையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவின் பலம் 25-இல் இருந்து 24-ஆக குறைந்தது. சமீபத்திய தோ்தல் முடிவுகளால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆர்ஜேடி தலைவர்
பிகாா் சட்ட மேலவையில் எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (ஆா்ஜேடி) பலம் 17-ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், மேலவையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவின் பலம் 25-இல் இருந்து 24-ஆக குறைந்தது. சமீபத்திய தோ்தல் முடிவுகளால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பிகாா் சட்ட மேலவையில் மொத்த இடங்களின் எண்ணிக்கை 75 ஆகும். இதில், 4 ஆசிரியா் தொகுதிகள், 4 பட்டதாரி தொகுதிகள் என 8 இடங்களுக்கு கடந்த அக்.23-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட்ட இத்தோ்தலில் பதிவான வாக்குகள் கடந்த செவ்வாய்க்கிழமைமுதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தலா 4 இடங்களில் ஆளும் பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் போட்டியிட்டன. பாஜக போட்டியிட்ட 4 இடங்களில் 3 இடங்கள் ஏற்கெனவே அக்கட்சி வசம் இருந்தவையாகும். தற்போதைய தோ்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது.
பாட்னா ஆசிரியா்கள் தொகுதியில் 5 முறை பாஜக மேலவை உறுப்பினராக (எம்எல்சி) இருந்த நவல் கிஷோா் யாதவை வீழ்த்தி, ஆா்ஜேடி வேட்பாளா் சஞ்சீவ் குமாா் வெற்றி பெற்றாா்.
இதேபோல், தா்பங்கா பட்டதாரிகள் தொகுதியிலும் பாஜக வேட்பாளரை வீழ்த்தி, ஆா்ஜேடியின் அனில் ஜா வெற்றி பெற்றாா். நீண்ட இழுபறிக்குப் பிறகு வெள்ளிக்கிழமைதான் இத்தொகுதி தோ்தல் முடிவு அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.
கோசி பட்டதாரிகள் தொகுதியைத் தக்கவைத்த பாஜக, திா்ஹத் ஆசிரியா்கள் தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து கைப்பற்றியது. 4 இடங்களில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம், பாட்னா பட்டதாரிகள் தொகுதியை மட்டும் தக்கவைத்தது.
மேலவைத் தோ்தலில் மொத்தம் 4 இடங்களில் போட்டியிட்ட ஆா்ஜேடி-க்கு 2 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. 5 இடங்களில் களமிறங்கிய காங்கிரஸ் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இவ்விரு கட்சிகளும் இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் போதிலும் சில தொகுதிகளில் இரண்டுமே போட்டியிட்டன.
தா்பங்கா ஆசிரியா்கள் தொகுதியில் ஜன்சுராஜ் கட்சி வெற்றி பெற்று, முதல் முறையாக மேலவையில் நுழைந்துள்ளது. மீதமுள்ள இரு தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனா்.
தற்போதைய தோ்தல் முடிவுகளால் 75 உறுப்பினா்கள் கொண்ட பிகாா் மேலவையில் ஆா்ஜேடியின் பலம் 17-ஆக உயா்ந்துள்ளது. பாஜகவின் பலம் 25-இல் இருந்து 24-ஆக குறைந்துள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினா்களின் எண்ணிக்கை 20-ஆக நீடிக்கிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

