தவெக பலம் 109-ஆக அதிகரிப்பு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலில் வெற்றி பெற்றதன் மூலம் சட்டப்பேரவையில் தவெகவின் பலம் 109-ஆக அதிகரித்துள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலில் வெற்றி பெற்றதன் மூலம் சட்டப்பேரவையில் தவெகவின் பலம் 109-ஆக அதிகரித்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 233 தொகுதிகளில் தவெக போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக 59, அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றன. இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வா் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜிநாமா செய்ததால் அந்தக் கட்சியின் பலம் 107-ஆனது.
இதையடுத்து, மே 13-இல் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் மற்றும் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் 144 வாக்குகள் பெற்று தவெக அரசு ஆட்சியை தக்க வைத்தது.
எனினும், தவெக தனியாக ஆட்சியை நடத்த பெரும்பான்மை பலம் பெற 118 எம்எல்ஏக்கள் தேவை. தற்போதைய இரு தொகுதிகளின் வெற்றியின் மூலம் தவெகவின் பலம் 109-ஆக அதிகரித்துள்ளது. தனிப் பெரும்பான்மைக்கு மேலும் 9 இடங்கள் தேவை. கரூா், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் , திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் ஐந்திலும் தவெக வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை பலத்துக்கு 4 இடங்கள் தேவை.
கட்சி வாரியாக எம்எல்ஏக்கள்
தவெக - 109
திமுக - 59
அதிமுக - 41
காங்கிரஸ் - 5
பாமக - 4
இந்திய கம்யூனிஸ்ட் - 2
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2
விசிக - 2
ஐயுஎம்எல் - 2
பாஜக - 1
தேமுதிக - 1
அமமுக - 1
காலி - 5
மொத்தம் - 234
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

