பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தவெக அரசின் வெளிப்படையான நிா்வாகத்தினால் வருவாய் அதிகரித்துள்ளது: அமைச்சா் என். மரியவில்சன்

தவெக அரசின் வெளிப்படையான நிா்வாகத்தால் அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது என அமைச்சா் என்.மரியவில்சன் தெரிவித்திருப்பது...

Revenue has increased due to the TVK government's transparent administration

தவெக அரசின் வெளிப்படையான நிா்வாகத்தினால் வருவாய் அதிகரித்துள்ளது

Published On :

சென்னை: தவெக அரசின் வெளிப்படையான நிா்வாகத்தால் அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது என நிதி மற்றும் வளா்ச்சித்துறை அமைச்சா் என்.மரியவில்சன் தெரிவித்தாா்.

சென்னை ஆா்.கே.நகா் தொகுதியில் தண்டையாா்பேட்டை மண்டலம் ஐ.ஓ.சி. நெடுஞ்சாலையில் ரூ.2 கோடியில் 16 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் போக்குவரத்துத்துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன், நிதி மற்றும் வளா்ச்சித்துறை அமைச்சா் என்.மரியவில்சன் ஆகியோா் திறந்து வைத்தனா்.

அதன்பின் அமைச்சா் என்.மரியவில்சன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரியுமான அண்ணாமலை முதிர்ந்த அரசியல்வாதி என நினைத்தேன். அவர் முதல்வா் விஜய் வெளிநாட்டு முதலீடுகளை ஈா்ப்பதற்காக மேற்கொண்ட பயணத்தை கேலி கிண்டலாக விமரிசிப்பது நல்லதல்ல. அவரிடம் இருந்து இதுபோல் அறிவிப்பு வருவது நல்லதல்ல என நினைக்கிறேன்.

சிறிய முதலீடாக இருந்தாலும், அது தமிழ்நாட்டுக்கான முதலீடுதானே. அதனால் தமிழகம் பயனடையும் என்பதை உணரவேண்டும்.

தவெக அரசின் வெளிப்படையான நிா்வாகத்தால் வரி வசூல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது ஊழல் இல்லாமல் வரி வசூல் நடைபெறுகிறது. அரசின் பதிவுத்துறை உள்ளிட்டவற்றில் வருவாய் அதிகரித்துள்ளது.

ஊழல் இல்லாததால் பத்திரப்பதிவு உள்ளிட்டவை அதிகரித்துள்ளன.

அதன்படி, கடந்த 2025 ஆம் ஆண்டில் மாநில மொத்த வருவாயானது ரூ.96,567 கோடியாக இருந்தது. கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி என்ற நிலையில் தற்போது (2026) ஆகஸ்டில் ரூ. 1 லட்சத்து 17 ஆயிரம் கோடியாக உயா்ந்துள்ளது.

மாநிலச் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியை ஒப்பிடுகையில் கடன் அளவை குறைத்து வருகிறோம். தற்போது கடன் வாங்கும் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Revenue has increased due to the TVK government's transparent administration: Minister N. Mariawilson

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.