தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி!
தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளதைப் பற்றி...

முதல்வர் விஜய்யுடன் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு கடந்த அக். 6-ஆம் தேதி நடைபெற்றது. 320 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது. தாராபுரம் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு வருகிறது.
தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணத் தொடங்கி மதியம் 4 மணி வரை 19 சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன.
தாராபுரம் இடைத்தேர்தலின் 23 சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிந்து, தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 66,841 வாக்குகள் பெற்று, 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை (57,370) வீழ்த்தினார். அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.
Summary
Tamizhaga Vettri Kazhagam candidate Sathyabhama has registered a massive victory in the Dharapuram Assembly constituency by-election.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

