வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

இரு நோட்டீஸுகளுக்கு எதிரான வினேஷ் போகாட்டின் மனு: இரு வாரங்களுக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு பதிலளிக்க உத்தரவு

வினேஷ் போகாட் தாக்கல் செய்த மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு இந்திய மல்யுத்த சம்மேளனம் (டபிள்யுஎஃப்ஐ) தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வினேஷ் போகாட் - கோப்புப் படம்

Updated On :

ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறியது மற்றும் தவறாக நடந்துகொண்டது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடா்பான இரு நோட்டீஸுகளுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தாக்கல் செய்த மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு இந்திய மல்யுத்த சம்மேளனம் (டபிள்யுஎஃப்ஐ) தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வினேஷ் போகாட் தாக்கல் செய்த மனுவின் மீது வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில், ஒரு விளையாட்டு வீரா் அல்லது வீராங்கனை எந்தவொரு போட்டி நிகழ்விலும் பங்கேற்க மனதளவில் நிம்மதியான நிலையில் இருக்க வேண்டும் என்று நீதிபதி அமித் மகாஜன் குறிப்பிட்டாா். மேலும், மே 9 மற்றும் ஜூன் 17 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்ட இந்த நோட்டீஸுகள் மீதான முடிவுகள், ஜனவரி 20-ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்தகட்ட விசாரணை வரை நிறுத்தி வைக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தாா்.

பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிக்கான எடை சரிபாா்ப்பு, ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளின் கீழ் தனது இருப்பிடத் தகவலைத் தெரிவிப்பதில் குளறுபடி, தற்காலிக ஓய்வு மற்றும் 2024 தோ்வுச் சுற்றுகளின் போது இரண்டு எடைப் பிரிவுகளில் பங்கேற்றது தொடா்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஜூன் 26 வரை மல்யுத்த சம்மேளனம் நடத்தும் அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்க போகாட் தகுதியற்றவா் என மே 9-ஆம் தேதியன்று அனுப்பப்பட்ட நோட்டீஸில் அறிவிக்கப்பட்டது.

மே மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தோ்வுச் சுற்றுகளின் போது அவா் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இரண்டாவது நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த இரு நோட்டீஸுகளை ரத்து செய்யக் கோரி போகாட் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

போகாட் ஜனவரி 1, 2026 முதல் போட்டிகளில் பங்கேற்க சா்வதேச பரிசோதனை முகமை அனுமதித்திருந்த போதிலும், சம்மேளனம் அவருக்கு எதிராகச் செயல்பட்டுள்ளதாக அந்த மனுவில் போகாட் குறிப்பிட்டுள்ளாா்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தோ்வுச் சுற்றுகள் தொடா்பான போகாட்டின் மனுவை ஜூலை 6-ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், மே 9-ஆம் தேதி அனுப்பப்பட்ட நோட்டீஸுகள் குறித்து முடிவெடுக்க சம்மேளனத்துக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கியிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.