மதுராந்தகத்தில் தேநீர் கடையில் வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்!ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்! 500 பேர் கைது!செய்யறிவால் பறிபோகும் மற்றும் அசைக்க முடியாத வேலைகள்! ஃபோர்டு நிர்வாகி தகவல்தொடர் விடுமுறை! மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்!இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்! பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்!மதுராந்தகம் இடைத்தேர்தல்! முதல்வர் விஜய்யின் சாலைவலம் தொடங்கியது!“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பேசிய பிரதமர் மோடி! மதுராந்தகம், தாராபுரத்தில் அக். 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!

பணி நீக்க காலத்திற்கான ஊதிய நிலுவை வழங்க முடியாது: சி.ஐ.எஸ்.எஃப். வீரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த காலத்திற்கான, ஊதிய நிலுவைத் தொகையை வழங்க கோரிய சி.ஐ.எஸ்.எஃப். வீரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..

சென்னை உயர்நீதிமன்றம்.

Published On :

பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த காலத்திற்கான, ஊதிய நிலுவைத் தொகையை வழங்க கோரிய சி.ஐ.எஸ்.எஃப் வீரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2002 ஆம் ஆண்டு மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையில் சேர்ந்த ஜி. சந்து என்பவர், ஆந்திரத்தில் பணிபுரிந்தபோது, அவர் மீதான குற்றவியல் வழக்கு நிலுவையில் இருந்ததால், 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், சந்துவை மீண்டும் பணிநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டது.

அதன்படி, 2019 ஆம் ஆண்டு மே மாதம் பணியில் சேர்க்கப்பட்ட நிலையில், தன்னுடைய ஜூனியர்களைவிட தனக்கு ஊதியம் குறைவாக இருப்பதாக வழக்கு தொடர்ந்தார். அதன்படி, சந்துவுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது. பின்னர், சென்னையில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப். பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அதன்பின்னர், பணிநீக்கம் செய்யப்பட்ட 2013 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்ட 2019 மே மாதம் வரையிலான காலத்துக்கான சம்பள நிலுவைத் தொகையை வழங்கக் கோரி சந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அவரது கோரிக்கையை நிராகரித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் நீதிபதி கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் ஆகியோர், நிலுவை ஊதியம் இல்லாமல், தொடர் சேவையுடன் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட மனுதாரர், பணி நீக்கக் காலத்தில் பணியில் இல்லாத நிலையில், அந்த காலத்திற்கான ஊதியத்தைக் கேட்க முடியாது என கூறி, சந்துவின் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Summary

The Madras High Court on Friday dismissed an appeal filed by a CISF personnel seeking payment of salary arrears for the period of his dismissal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.