'கல்வி என்பது ஒவ்வொரு மாணவரின் உரிமை, சலுகை அல்ல': ராகுல் காந்தி
கல்வி என்பது ஒரு சலுகை அல்ல, அது நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரின் உரிமை என்றும்

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி - கோப்புப்படம்
கல்வி என்பது யாருக்கும் வழங்கப்படும் ஒரு சிறப்புச் சலுகை அல்ல; அது நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் கிடைப்பதற்கு அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமை என்றும், விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிர்வாக அமைப்பால் புறக்கணிக்கப்படக் கூடாது என்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக் நகருக்கு புதன்கிழமை சென்றிருந்த ராகுல் காந்தி, பழங்குடியினருக்கான ஆசிரமப் பள்ளிகளின் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் உள்பட பழங்குடியின மாணவர் குழுவினரை சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, கல்வி என்பது யாருக்கும் வழங்கப்படும் ஒரு சிறப்புச் சலுகை அல்ல; அது நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் கிடைப்பதற்கு அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமை என்றும், விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிர்வாக அமைப்பால் புறக்கணிக்கப்படக் கூடாது என்றும் ராகுல் காந்தி கூறினார்.
இது குறித்து அவர் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
நாசிக் பயணத்தின்போது ஆசிரமப் பள்ளிகளின் மோசமான உள்கட்டமைப்பு வசதிகள், விடுதி வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பழங்குடியின மாணவர் குழுவைச் சந்தித்தேன்; அவர்களின் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளைத் நான் கவனமாகக் கேட்டறிந்தேன்.
"கல்வி என்பது யாருக்கும் வழங்கப்படும் ஒரு சிறப்புச் சலுகை அல்ல; அது நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் கிடைப்பதற்கு அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமை."
ஒவ்வொரு மாணவரும் கண்ணியமான, பாதுகாப்பான மற்றும் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையைப் பெறுவதற்கான உரிமை உடையவர்கள் என்று வலியுறுத்தினார்.
மேலும், விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிர்வாக அமைப்பால் புறக்கணிக்கப்படக் கூடாது; அவர்களுக்கு அமைப்பின் ஆதரவும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
நாசிக் பயணத்தின்போது, மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அளவிலான தலைவர்களுடன் கலந்துரையாடிய காந்தி, கட்சியின் கொள்கைகளில் உறுதியாக இருக்குமாறும், மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
Summary
The Congress MP met a delegation of tribal students, including those who were on a hunger strike to press for their demands, during his visit to Nashik in Maharashtra on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






