
கொல்கத்தா மெட்ரோ ரயிலில் புகை கிளம்பியதால் பரபரப்பு!
கொல்கத்தா மெட்ரோவின் நீலம் வழித்தட ரயிலில் புகை கிளம்பியது பற்றி....

கொல்கத்தா மெட்ரோ. - கோப்புப்படம்.
கொல்கத்தா மெட்ரோவின் நீலம் வழித்தட ரயிலில் புகை கண்டறியப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மெட்ரோவின் நீலம் வழித்தட ரயிலில் வெள்ளிக்கிழமை மாலை புகை கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தக்ஷினேஸ்வர் நோக்கிச் சென்ற அந்த ரயில், மாலை 4.10 மணியளவில் பெல்காச்சியா ரயில் நிலையத்தில் இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ரயிலின் ஒரு பெட்டியின் அடிப்பகுதியில் இருந்து புகை வருவது கண்டறியப்பட்டதைடுத்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக மெட்ரோ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பிளாட்பாரம் பகுதியில் சிறிது நேரம் புகை சூழ்ந்தது.
ஆனால் ஊழியர்கள் உடனடியாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர் என்று அவர் கூறினார். மேலும், இச்சம்பவத்தால் எவருக்கும் காயம் அல்லது உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பெரிய அளவில் பரபரப்பும் நிலவவில்லை.
அந்த ரயில் சோதனைக்காக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பாதிக்கப்பட்ட ரயிலின் பயணிகள் அடுத்த ரயிலில் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர் . இந்தச் சம்பவத்தால் நீலம் வழித்தடத்தின் இருபுற ரயில்களின் சேவையும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
Summary
Smoke was detected in a train on the Blue Line of the Kolkata Metro on Friday evening, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







