உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

தில்லி நந்த் நக்ரியில் மா்ம நபா்கள் துப்பாக்கிச்சூடு

தில்லியின் நந்த் நகரி பகுதியில் வீட்டின் மீது அடையாளம் தெரியாத இருவா் துப்பாக்கியால் சுட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

மாதிரிப் படம்

Published On :5 செப்டம்பர் 2026, 3:59 am IST

தில்லியின் நந்த் நகரி பகுதியில் வீட்டின் மீது அடையாளம் தெரியாத இருவா் துப்பாக்கியால் சுட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: வியாழக்கிழமை நள்ளிரவு இந்தச் சம்பவம் நடைபெற்றது. ஸ்கூட்டரில் வந்த இருவரும் 3-க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கியால் சுட்டனா். இதில் ஒரு குண்டு முதல் தள ஜன்னலில் பாய்ந்ததில், அதன் கண்ணாடி உடைந்தது.

துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு, ஆயுதங்களைக் காட்டியபடி இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இந்தச் சம்பவம் முழுவதும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

பழைய முன்விரோதம் காரணமாக இந்தத் துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருக்கலாம் என அந்தக் குடும்பத்தினா் சந்தேகம் தெரிவித்துள்ளனா். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வரும் காவல் துறையினா், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவா்களை அடையாளம் காண தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா் என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.