
தில்லியில் மோசமான வானிலை: விமான சேவைகளில் தாமதம்!
தில்லியில் வானிலை மோசமாக உள்ளதால் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது குறித்து...

இண்டிகோ விமானம். - கோப்புப்படம்
தில்லியில் வானிலை மோசமாக உள்ளதால் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் சனிக்கிழமை (செப். 5) அறிவுறுத்தியுள்ளது.
தில்லியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வானிலை மோசமான நிலையில் உள்ளது. இதனால் விமான சேவைகளில் தாமதம் மட்டுமல்லாமல் சில விமானங்கள் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
தில்லியில் மோசமான வானிலை நிலவுவதால் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எங்கள் குழு இந்த நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
நீங்கள் இன்று பயணம் மேற்கொள்பவராக இருந்தால், எங்கள் நிறுவனத்தின் இணையதளம் அல்லது செயலியின் மூலம் உங்கள் விமானத்தின் நேரத்தைச் சரிபார்த்துக் கொள்ளவும்.
சாலைகள் வழக்கத்தை விட நெரிசலாக இருக்கக்கூடும் என்பதால், கூடுதல் பயண நேரத்தையும் கணக்கில் கொள்ளவும். உங்களின் பொறுமைக்கும் புரிதலுக்கும் நன்றி. உங்கள் வசதியும் பாதுகாப்பும் எங்களக்கு முன்னுரிமையாகும் என்று குறிப்பிட்டுள்ளது.
Travel Advisory
— IndiGo (@IndiGo6E) September 5, 2026
Bad weather is currently affecting #Delhi, leading to possible delays in flight operations.
Our teams are closely monitoring the situation, if you're travelling today, we recommend checking your flight status on our website via https://t.co/MDv6zfNvLQ or appâ¦
Summary
IndiGo Airlines advised on Saturday (Sept. 5) that flight services in Delhi are likely to be delayed due to adverse weather conditions.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







