அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 20 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரம் மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் பற்றி...

rain

சென்னை, 20 மாவட்டங்களில் மழை - கோப்புப்படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 4:40 pm IST

தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களில் இன்றிரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவும் காரணமாக இன்று செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை ஏற்கெனவே விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அடுத்த மூன்று மணிநேரத்துக்கான (ஆக. 10, இரவு 7 மணிவரை) மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, தென்காசி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Summary

Rain in Chennai and 20 districts over the next 3 hours!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.