தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புவிநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

காலையில் கொளுத்திய வெய்யில்; மாலையில் வெளுத்து வாங்கும் மழை! இது சென்னை

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்து வருகிறது.

சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழை

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் மழை

Published On :

சென்னையில் கடந்த ஒரு சில வாரங்களாக மாலை அல்லது இரவில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று வாரத்தின் முதல் நாளில் காலையில் இருந்து வெய்யில் கொளுத்திய நிலையில், மாலை 4 மணிக்கெல்லாம் கரு மேகங்கள் திரண்டு வந்து சூரியனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டன.

அடிக்கும் வெய்யிலைப் பார்த்தவர்கள் இன்று மாலை நிச்சயம் மழை இருக்கும் என்று நினைத்திருப்பார்கள். நினைத்தது போலவே ஆனால் எதிர்பாராத வகையில் 4 மணிக்கெல்லாம் பள்ளியில் மணி அடித்தது போல வந்துவிட்டது மழை.

வெய்யில் இப்படி அனல் அடிக்கிறதே என்று பேசிக் கொண்டிருந்தவர்கள் களைப்பாறுவதற்குள் ஜோவென சத்தத்துடன் மழை பெய்யத் தொடங்கிவிட்டது.

சென்னையில், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதைப்போல, சென்னையின் புறநகர்ப் பகுதிகள்தானே என மழை எந்த பாகுபாடும் காட்டவில்லை. சென்னை பூவிருந்தமல்லி, காட்டுப்பாக்கம், ஐயப்பன் தாங்கல் குமணன்சாவடி, செம்பரம்பாக்கம், நசரத்பேட்டை, அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Summary

Scorching sun in the morning; torrential rain in the evening! This is Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.