குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் பெரும் நிலச்சரிவு!

சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது பற்றி....

Massive landslide hits Sikkim's Mangan district

சிக்கிமில் நிலச்சரிவு.

Published On :6 செப்டம்பர் 2026, 1:51 pm IST

சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

சிக்கிம் மாநிலம், தீஸ்தா மற்றும் சியாகூங் நதிகள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகே, தெங் சுரங்கப்பாதைக்கு எதிரே உள்ள நாகா வனப்பகுதியில், புதிதாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாகா-டோசா சாலையை ஒட்டியுள்ள மலையின் பெரும் பகுதி சரிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலச்சரிவால் இரண்டு நதிகளின் நீரோட்டமும் பகுதியளவு தடைபட்டுள்ளது என்று அவர்கள் மேலும் கூறினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

அதேசமயம், பொருட்சேதம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மதிப்பிடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சங்கலாங் மற்றும் பிடாங் புறக்காவல் நிலையப் பகுதிகளில் நதியின் நீர்மட்டம் தற்போது இயல்பாகவே உள்ளது. நீர்மட்டத்தைத் தொடர்ந்து கண்காணிக்கவும், அதில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்கவும் உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.

Summary

A massive landslide hit Sikkim's Mangan district in the early hours of Sunday, partially blocking the flow of two rivers, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.