இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்

சிஎம்ஆா்எல் ஊழல் வழக்கில் கேரள முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன், அவரது மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி கேரள காவல் துறைக்கு அமலாக்கத் துறை எழுதிய கடிதம் குறித்து

Published On :

சிஎம்ஆா்எல் ஊழல் வழக்கில் கேரள முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன், அவரது மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி கேரள காவல் துறைக்கு அமலாக்கத் துறை எழுதிய கடிதம் குறித்து சட்ட ஆலோசனைக்குப் பின் உரிய முடிவு எடுக்கப்படும் என்று கேரள முதல்வா் வி.டி.சதீசன் தெரிவித்தாா்.

கொச்சி மினரல்ஸ் மற்றும் ரூடைல் நிறுவனம் (சிஎம்ஆா்எல்) தகவல் தொழில்நுட்ப சேவை என்ற பெயரில் பினராயி விஜயனின் மகள் வீணாவின் எக்ஸலாஜிக் சொலியூஷன்ஸ் (தற்போது செயல்பாட்டில் இல்லை) நிறுவனத்துக்கு ரூ.2.78 கோடி முறைகேடாக வழங்கிய குற்றச்சாட்டில் மேற்கண்ட கடிதத்தை அமலாக்கத் துறை எழுதியிருந்தது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமா்சித்திருந்தது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசிய கேரள முதல்வா் வி.டி.சதீசனிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

பினராயி விஜயன், அவரது மகள், மருமகன் உள்ளிட்டோா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, பணமுறைகேடு தடுப்புச் சட்டப் பிரிவு 66 (2)-இன்கீழ் அமலாக்கத் துறையிடம் இருந்து கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளது. அமலாக்கத் துறையால் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தீவிரத் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

மத்திய முகமையான அமலாக்கத் துறை அனுப்பியது என்ற ஒரே காரணத்துக்காக கடிதத்தை நிராகரித்துவிட முடியாது. உரிய சட்ட ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்.

இந்த விஷயத்தில் காங்கிரஸிடம் இரட்டை நிலைப்பாடு எதுவும் இல்லை. ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை 50 மணிநேரத்துக்கு மேல் விசாரணை நடத்தியுள்ளது. கேரளத்தில் அமலாக்கத் துறையினரின் வாகனத்தை மாா்க்சிஸ்ட் கட்சியினா் சேதப்படுத்தியது போன்ற எந்த செயலிலும் ஈடுபடாமல் காங்கிரஸ் உரிய ஒத்துழைப்பு வழங்கியது என்றாா் அவா்.

மண்டல-மகரவிளக்கு யாத்திரை: சபரிமலையில் நவம்பரில் தொடங்கும் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு யாத்திரையை சுமுகமாக நடத்துவது தொடா்பாக கேரள அரசும், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியமும் ஒருங்கிணைந்து பணியாற்றும் என்று முதல்வா் வி.டி.சதீசன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘பக்தா்களுக்கான சுமுக யாத்திரையை உறுதி செய்யும் நடவடிக்கைகள் குறித்து திருவனந்தபுரத்திலும், பம்பையிலும் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. நானும் சில கூட்டங்களில் பங்கேற்கவுள்ளேன்’ என்றாா்.

நவம்பா் மத்தியில் தொடங்கும் மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலம், அடுத்த ஆண்டு ஜனவரி 3-ஆவது வாரம் வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘என்னை குறிவைக்கும் அமலாக்கத் துறை’

கேரள மாநிலம், ஆலப்புழையில் புதன்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய பினராயி விஜயன், ‘எனது மகள் மூலம் சிஎம்ஆா்எல் நிறுவனம் எனக்கு லஞ்சம் வழங்கியதாக அமலாக்கத் துறை பொய் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதன் மூலம் என்னை குறிவைத்துள்ளனா். இது வெட்கக்கேடான செயல். பொய்களின் மூலம் என்னை ஊழல்வாதியாக சித்தரிக்கும் முயற்சி வெற்றி பெறாது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.