
தில்லி கட்டட விபத்து: சுபம் தியாகியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
தில்லி விடுதி கட்டட விபத்தில் முன்ஜாமீன் நிராகரித்தது பற்றி..

இடிந்துவிழுந்த கட்டடம். - file photo
வடகிழக்கு தில்லியின் சத்ய நிகேதனத்தில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் முன்ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
செப். 6 அன்று தில்லியில் பேயிங் கெஸ்ட் தங்குமிடமாக செயல்பட்டு வந்த ஐந்து மாடிக் கட்டடம் ஞாயிறன்று மதியம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
கட்டட விபத்து தொடர்பாக, கட்டட உரிமையாளர் உள்பட குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். விடுதி கட்டடத்துடன் தொடர்புடைய சுபம் தியாகி தனக்கும் கட்டடத்துக்கும் தொடர்பில்லை என முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை கூடுதல் அமர்வு நீதிபதி சௌரப் பிரதாப் லலேர் இன்று விசாரித்தார். முன்ஜாமீன் கோரிய மனுவில் மறைக்கப்பட்டிருந்த இரண்டாவது, மூன்றாவது தளங்களுக்கான வாடகை ஒப்பந்தம் மற்றும் மற்றொரு குற்றவாளியான சுதன்ஷுவுடனான ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட குத்தகை ஒப்பந்தம் ஆகிய அனைத்துச் சூழல்களையும் கருத்தில் கொண்டு நீதிபதி இந்த மனுவை நிராகரித்தார்.
சத்ய நிகேதனத்தில் தங்கும் விடுதிகளை நடத்துவதில் ஒரு கூட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதனால், மனுதாரரான சுபம் தியாகி இதுகுறித்த ஆய்வு , ஒப்புதல் மற்றும் நிதி செயல்பாட்டுப் பங்கு ஆகியவை குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.
சுபம் தியாகி தில்லி வழக்குரைஞர் மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குரைஞர் என்றும், தான் பாட்டியாலா நீதிமன்றங்களில் பயிற்சி செய்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கட்டட உரிமையாளர் சுதான்ஷு நடத்தி வந்த விடுதியில் பணத்தை முதலீடு செய்தது தவிர, அந்தக் கட்டடத்தின் கட்டமைப்பு மீது தனக்கு எந்தவிதமான உரிமையோ, பட்டாவோ, கட்டுப்பாடோ இல்லை என்று சுபம் தியாகி வாதிட்டார்.
இருப்பினும், இதுதொடர்பாக விரிவான விசாரணை கோர வேண்டும், முன்ஜாமீன் வழங்குவதற்கான முகாந்திரம் இல்லை எனவே சுபம் தியாகியின் மனுவை நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




