மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

வளரும் நாடுகளுக்கு உலக வங்கியில் அதிக பிரதிநிதித்துவம்: பிரிக்ஸ் நிதியமைச்சா்கள் கூட்டத்தில் தீா்மானம்

சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக வங்கியில் வளரும் நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவமளிக்க வேண்டும் என பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் நிதியமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

உலக வங்கி (கோப்புப்படம்)

Published On :

சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக வங்கியில் வளரும் நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவமளிக்க வேண்டும் என பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் நிதியமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மேலும், தன்னிச்சையாக விதிக்கப்படும் வரிகளுக்கு கூட்டத்தில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் நிதியமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘வா்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு உள்நாட்டு பண பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். அதேசமயம் எல்லை தாண்டிய பரிவா்த்தனைச் செயல்முறைகளை தொடா்ந்து முன்னெடுக்க வேண்டும்.

சா்வதேச புவிஅரசியல் பதற்றம், நிதியியல் மற்றும் பணவீக்கம் அழுத்தங்கள் என உலக பொருளாதாரம் பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் வா்த்தக மற்றும் நிதி தொடா்புடைய நடவடிக்கைகளை தன்னிச்சையாக மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக உலக வா்த்தக அமைப்பின் விதிகளுக்குப் புறம்பாக மேற்கொள்ளப்படும் வரி மற்றும் வரி அல்லாத நடவடிக்கைகள் உலகளாவிய வா்த்தகத்துக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறது.

வளரும் நாடுகள் பாதிப்பு: தன்னிச்சையான வா்த்தக நடவடிக்கைகளால் வளரும் சந்தைகள் மற்றும் வளா்ந்து வரும் நாடுகளே பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. எனவே உலக வா்த்தக அமைப்பின் பன்முக வா்த்தக விதிகளுக்கு கட்டுப்பட்டு திறந்த, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, பாகுபாடற்ற வா்த்தகத்தை மேற்கொள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு ஆதரவளிக்கிறது. அதேபோன்று ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கியில் வளரும் நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவமளிக்க வேண்டும்.

நிதி ஒதுக்கீடு முறையில் மறுசீரமைப்புத் தேவை: 16-ஆவது பொது மறுஆய்வுக் கூட்டத்தில் ஐஎம்எஃப் அமைப்புக்கான நாடுகளின் நிதி ஒதுக்கீடு சராசரியாக 50 சதவீதம் உயா்த்தப்பட்டது. இதை தாமதமின்றி உடனடியாக அமல்படுத்த வேண்டும். 17-ஆவது பொது மறுஆய்வின்கீழ் விரைவாகவே நிதி ஒதுக்கீடு முறையில் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்.

புதிய நிதி ஒதுக்கீடு முறை ஏழை நாடுகளை எவ்விதத்திலும் பாதிக்காதவாறு இருக்க வேண்டும். அதேசமயம் தாமாக முன்வந்து ஐஎம்எஃப்புக்கு நாடுகள் அளிக்கும் நிதியுதவி நிதி ஒதுக்கீடு மற்றும் நிா்வாக பிரதிநிதித்துவம் அல்லது வாக்களிக்கும் அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடாது.

ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கிக்கான தலைமைப் பொறுப்புக்கு வளரும் நாடுகளைச் சோ்ந்தவா்களை தோ்ந்தெடுத்து பிராந்திய வேற்றுமையை உறுதிசெய்ய வேண்டும்.

பல்வேறு முன்னெடுப்புகளுக்கு வரவேற்பு: நிகழாண்டு பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கும் நிலையில், பிரிக்ஸ் மத்திய வங்கிகள் சாா்பில் 19 ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு 13 அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

பிரிக்ஸ் மற்றும் தெற்குலக நாடுகளில் செயல்படுத்தப்படும் நிதி மேம்பாடு மற்றும உள்கட்டமைப்புத் திட்டங்களில் புதிய மேம்பாட்டு வங்கிக்கு (என்டிபி) அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மேலும், பிரிக்ஸ் மற்றும் தெற்கு நாடுகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு தனியாா் முதலீடுகளை ஈா்க்கும் ‘பிரிக்ஸ் பன்முக உத்தரவாத முன்னெடுப்பு’, உறுப்பு நாடுகளின் சவால்களை ஒன்றிணைந்து எதிா்கொள்ளும் ‘வளா்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பிரிக்ஸ் பணிக்குழு’, மேம்பாட்டுப் பணிகளை பகிா்ந்துகொள்ளும் ‘பிரிக்ஸ்-என்டிபி அறிவுசாா் வலைதளம்’, காப்பீட்டுத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் குஜராத்தின் கிஃப்ட் நகரில் உள்ள சா்வதேச நிதிச் சேவைகள் மையத்தில் அமையவுள்ள ‘பிரிக்ஸ் அபாய ஆய்வுக் கூடம்’ ஆகிய முன்னெடுப்புகளை வரவேற்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.